ETV Bharat / state

அப்துல் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் சிலம்பம், யோகா போட்டி

author img

By

Published : Jan 10, 2022, 10:34 PM IST

திருவள்ளூரில் அப்துல் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் சிலம்பம், யோகா போட்டிகள் நடைபெற்றன.

சிலம்பம், யோகா போட்டி
சிலம்பம், யோகா போட்டி

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கம்மவார்பாளையம் பகுதியில் அப்துல் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் நடைபெற்ற சிலம்பம், யோகா போட்டிகளில் திருவள்ளூர், சென்னை, தருமபுரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சி ஸ்கூல் கேம் டவுன்லோட் மண்ட பவுண்டேஷன் அஜித்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. சிலம்பம் பயிற்சியாளர் ராம், அப்துல் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் தலைவர் ஜெயப்பிரியா ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்திருந்தனர்.

சிலம்பம், யோகா போட்டி

இதில் நுங்கம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் டேவி (எ) பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

இப்போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்களைக் கட்டிக்கொண்டு 15 நிமிடம் முதல் 25 நிமிடம் வரை சிலம்பம் சுற்றி அசத்தினர்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற யோகாசனத்தில் 15 நிமிடங்கள் வரை கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்களைக் கட்டிக்கொண்டு ஓம்கார ஆசனம், சக்கராசனம், சிரசாசனம், மயூராசனம், கோமுஆசனம் உள்ளிட்ட ஆசனங்களை எளிமையாகச் செய்து அசத்தினர்.

இதில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்குத் தடைகோரி உயர் நீதிமன்றக்கிளையில் மேல் முறையீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.