ETV Bharat / state

தேசியத் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி பெண் நூதன முறையில் மோசடி!

author img

By

Published : Feb 3, 2020, 11:18 PM IST

திருவள்ளூர்:  மத்திய அரசின் கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 3 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணில் செயல், மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

photo with national leaders
photo with national leaders

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமாரி. இவர் கேட்டரிங் சென்டர், ஆடியோஸ் நடத்தி வருகிறார். இவர் தனது தொழிலை விரிவு செய்வதற்காக வங்கிக் கடன் பெற முயற்சித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நிரஞ்சனி என்பவர், தனது சகோதரர் சூசைநாதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள், வியாபாரம் செய்பவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் மத்திய அரசின் கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், கடன் பெற்று தருவதாகக் கூறியுள்ளார்.

அப்போது பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ஜே.பி. நட்டா, வெங்கையா நாயுடு, முன்னாள் பாஜக தமிழ்நாடு தலைவரும் தற்போதைய தெலங்கானா ஆளுநராகவும் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து, தனக்கு இவர்கள் அனைவரும் மிகவும் நெருக்கம் என்றும், அதன் மூலம் தங்களுக்கு 3 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தர முடியும் என்றும் செல்வகுமாரியிடம் கூறி, ரூ. 6 லட்சத்தைக் கமிஷனாக வாங்கியுள்ளார்.

ஆனால், நெடுநாட்களாகியும் வங்கிக்கடன் பெற்றுத்தராததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான செல்வகுமாரி ரூ.6 லட்சம் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்குப் பணத்தைத் தர முடியாது என்றும், மீறி கேட்டால் கொலை செய்துவிடுவேன் என்றும் பகிரங்கமாக மிரட்டியுள்ளார், நிரஞ்சனி.

இதனையடுத்து செல்வகுமாரி திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்தப் புகாரின் பெயரில், காவல்துறையினர் நிரஞ்சனி, அவரது சகோதரர் சூசைநாதன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

தேசியத் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி பெண் நூதன முறையில் மோசடி

பாஜக தேசியத் தலைவர்களுடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்து வியாபாரிகள், தொழில்அதிபர்களிடம் நூதன முறையில் மோசடி செய்த பெண்ணைக் கைது செய்ததால், மேலும் பல திடுக்கிடும் தகவல் கிடைக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் 4 அரசு ஊழியர்கள் கைது

Intro:திருவள்ளூர் அருகே மத்திய அரசின் கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறி 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் பாஜக தேசியத் தலைவர் களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காண்பித்து நூதன முறையில் மோசடி.


Body:திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமாரி இவர் கேடரிங் சென்டர் மற்றும் ஆடியோஸ் நடத்தி வருகிறார். இவர் தனது தொழிலை விரிவு செய்வதற்காக வங்கி கடன் பெற முயற்சித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நிரஞ்சனி என்பவர் தனது சகோதரர் சூசை நாதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் வியாபாரம் செய்பவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் மத்திய அரசின் கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். அப்போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷா,ஜே.பி நட்டா,வெங்கையா நாயுடு,முன்னாள் பாஜக தமிழக தலைவரும் தற்போது தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து தனக்கு இவர்கள் அனைவரும் மிகவும் நெருக்கம் என்று அதன் மூலம் தங்களுக்கு 3 கோடி ரூபாய் கடன் பெற்று தர முடியும் என்று செல்வகுமாரியிடம் கூறிய 6 லட்சத்தைக் கமிஷனாக வாங்கியுள்ளார். ஆனால் வங்கி கடனும் பெற்று தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான செல்வகுமாரி 6 லட்சம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பணத்தை தர முடியாது என்றும் மீறி கேட்டால் கொலை செய்துவிடுவேன் என்றும் பகிரங்கமாக மிரட்டியுள்ளார் மோசடி செய்த பெண் நிரஞ்சனி. இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திலும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் செல்வகுமாரி என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறையினர் நிரஞ்சனி மற்றும் அவரது சகோதரர் சூசைநாதன் ஆகியோரை தேடி வருகின்றனர். பாஜக தேசியத் தலைவர்களுடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்து வியாபாரிகள் மற்றும் தொழில்அதிபர்களிடம் நூதன முறையில் மோசடி செய்த பெண்ணை கைது செய்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல் கிடைக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.