ETV Bharat / state

பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து குறைவு

author img

By

Published : Nov 8, 2019, 1:01 PM IST

திருவள்ளூர்: ஆந்திர மாநில விவசாயிகள் சாயக்கால்வாய் நீரை விவசாயத்திற்கு எடுப்பதால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து குறைந்தது.

நீர்

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான நீர்த்தேக்கங்களில் ஒன்றாக பூண்டி நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் செப்டம்பர் 28ஆம் தேதியிலிருந்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்துகொண்டிருக்கிறது.

கண்டலேறு அணையிலிருந்து அதிகபட்சமாக விநாடிக்கு 2800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் பூண்டிக்கு 800 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது. கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி ஆகும். இந்த அணைக்கு சோமசீலா அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். சோமசீலா அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

சோமசீலா அணையிலிருந்து நாள் ஒன்றுக்கு அரை டி.எம்.சி. வீதம் கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கண்டலேறு அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துவருகிறது. அணையில் கடந்த செப்டம்பர் மாதம் வெறும் 5 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையில் 40 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

இந்நிலையில் நெல்லூர் மாவட்டத்தில் பருவ மழை பெய்யவில்லை. மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் அங்குள்ள விவசாயிகள் நெல் நடவு செய்திருந்தனர். எனவே நெற்பயிரை காப்பாற்ற கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி கால்வாயில் உள்ள மதகுகளை திறக்க ஆந்திர விவசாயிகள் அம்மாநில அரசை கேட்டுக்கொண்டனர்.

நீர் வரத்து குறைவு

இதற்கு அரசு ஒத்துக்கொண்டதால் கிருஷ்ணா நீரை தங்களது பகுதியில் உள்ள மதகுகளை திறந்து விட்டு ஆந்திர விவசாயிகள் வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர். இதேபோல் சிறு சிறு ஏரிகளுக்கும் கிருஷ்ணா நதிநீரை திருப்பி உள்ளனர். இதனால் பூண்டிக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

Intro:பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கத் திற்கு
கிருஷ்ணா தண்ணீர் வரத்து குறைந்தது.:
ஆந்திர மாநில விவசாயிகள் சாய்கால்வாய் நீரை விவசாயத்திற்கு எடுப்பதால் நீர் வரத்து கணிசமாக குறைந்தது.



Body:பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கத் திற்கு
கிருஷ்ணா தண்ணீர் வரத்து குறைந்தது.:
ஆந்திர மாநில விவசாயிகள் சாய்கால்வாய் நீரை விவசாயத்திற்கு எடுப்பதால் நீர் வரத்து கணிசமாக குறைந்தது.



சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான நீர்த்கங்களில் ஒன்றாக பூண்டி நீர்த்தேக்கம்.உள்ளது. இந்த அணைக்கு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் செப்டம்பர் 28ந் தேதியிலிருந்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கண்டலேறு அணையிலிருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் பூண்டி க்கு அதிகபட்சமாக 800 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது. கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. இந்த அணைக்கு சோமசீலா அணையிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். சோமசீலா அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இதனால் நாள் ஒன்றுக்கு அரை டி.எம்.சி. வீதம் கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கண்டலேறு அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 40 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வெறும் 5 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு இருந்து குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் நெல்லூர் மாவட்டத்தில் பருவ மழை பெய்யவில்லை. பருவ மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் அங்குள்ள விவசாயிகள் நெல் நடவு செய்து இருந்தனர்.

நெற்பயிரை காப்பாற்ற கண்டலேறு அணையிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி கால்வாயில் உள்ள மதகுகளை திறக்க விவசாயிகள் ஆந்திர அரசை கேட்டு கொண்டனர்.

இதற்கு அரசு இசைவு தெரிவித்ததை அடுத்து ஆந்திர விவசாயிகள் கிருஷ்ணா நீரை தங்களது பகுதியில் உள்ள மதகுகளை திறந்து விட்டு வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர். இதேபோல் சிறு சிறு ஏரிகளுக்கும் கிருஷ்ணா நதி நீரை திருப்பி உள்ளனர். அதுமட்டுமின்றி வழிநெடுக 500 க்கும் மேற்பட்ட இடங்களில் மோட்டார்களை வைத்து தண்ணீரை கால்வாயில் இருந்து உறிஞ்சி விவசாயத்திற்கு எடுக்கின்றனர்

இதனால் பூண்டிக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இன்று காலை வினாடிக்கு 125 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்து வந்து கொண்டிருந்தது. பூண்டி நீர்த்தேக்கம் மொத்த உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 29. 15 அடியாக பதிவானது. 1550 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி அணைக்கு மழை நீர் வினாடிக்கு 220 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. பூண்டியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 22 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. லிங்க் கால்வாயில் புழல் மற்றும் செம்பரம்பாக்கத்துக்கு 830 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. செப்டம்பர் 28ந் தேதியிலிருந்து இன்று காலை வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2. 2 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.
சாய் கால்வாயில் வரும் தண்ணீரை ஆந்திர விவசாயிகள் தங்களது தேவைக்குஆந்திர மாநிலத்தில் உள்ள ஏரிகளுக்கு பாசனத்திற்காக திருப்பிவிடப்பட்டதால் கால்வாய் வரும் தண்ணீரை மோட்டார்களை கொண்டு உறிஞ்சி எடுப்பதும் கண்டலேறு அணையிலிருந்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் எல்லைக்கு வந்தடையும் கிருஷ்ணா நதி நீரின் அளவு கணிசமாக குறைந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வந்து சேர்வதும் படிப்படியாக குறையத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.