ETV Bharat / state

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - காவல் நிலையம் முற்றுகை

author img

By

Published : Sep 27, 2021, 7:25 AM IST

Updated : Sep 27, 2021, 7:51 AM IST

திருவள்ளூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவரது காதலனை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விசிகவினர்
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விசிகவினர்

திருவள்ளூர்: நரசமங்கலம் காலனியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் ஜெயஸ்ரீ. இவரும் அதேபகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரும் ஒன்றரை ஆண்டு காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஜெயஸ்ரீ பிபிஏ படிப்பு முடித்து மப்பேடு பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை (செப்.25) வேலைக்குச் சென்ற ஜெயஸ்ரீ இரவு வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் ஆகியும் ஜெயஸ்ரீ வராததால் செல்போன் மூலம் அவரது பெற்றோர் தொடர்பு கொண்டனர். ஆனால், செல்போன் ஸ்விட் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து ஜெயஸ்ரீயை தேடியபோது கருவேல மரத்தில் துப்பாட்டாவில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனைக் கண்ட பெறோர் அதிர்சியடைந்தனர்.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விசிகவினர்

விசாரணை

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மப்பேடு காவல் துறையினர், ஜெயஸ்ரீயின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண்ணின் இறப்பிற்கு அவரது காதலன் இளவரசன் தான் காரணம் என பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால், அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

காவல் நிலையம் முற்றுகை

இந்நிலையில், நேற்று (செப்.26) காலை 11 மணி வரை இளவரசனை காவல் துறையினர் கைது செய்யாததால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மப்பேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், குற்றவாளியை விரைவில் கைது செய்வதாக கூறினார். மேலும், பெண்ணின் சடலத்தை பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கிற்கான காரியங்களை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: உயிரிழந்த நிலையில் இளைஞர் மீட்பு - ஆணவ கொலையா காவல் துறை விசாரணை?

Last Updated : Sep 27, 2021, 7:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.