ETV Bharat / state

அதிமுகவை சசிகலா விரைவில் வழிநடத்துவார் - முன்னாள் எம்எல்ஏ தண்ணீர்குளம் ஏழுமலை

author img

By

Published : Jul 4, 2021, 2:25 AM IST

Updated : Jul 4, 2021, 11:23 AM IST

அதிமுகவை சசிகலா மீட்டெடுத்து வழி நடத்துவார் என பூந்தமல்லி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தண்ணீர்குளம் ஏழுமலை கூறினார்.

tn_trl_02_ezumalai_byet_visual_script_Tn10036
tn_trl_02_ezumalai_byet_visual_script_Tn10036

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ பொன்.ராஜா அதிமுகவில் இணைந்துள்ளார். இதுதொடர்பாக பூந்தமல்லி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலாளருமான தண்ணீர்குளம் ஏழுமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "அதிமுகவில் 122 எம்எல்ஏகளில் ஒருவராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக எம்எல்ஏக்களில் பலருக்கு அவரை தெரியாத நிலையில், அவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக சசிகலா அறிவித்தார்.

சசிகலாவை யார் என்றே தெரியாது என கூறி, துரோகத்தை செய்தவர் எடப்பாடி பழனிசாமி. அவர் பதவியை எவ்வாறு பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமியை நம்பி சென்றவர்கள் யாரும் வாழ முடியாது.


எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உருக்குலைந்து உள்ளது. சசிகலா கட்சியை மீட்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார். விரைவில் கட்சியை மீட்டு அம்மா வழியில் நடத்தி செல்வார். இதுவே அதிமுக அடிமட்ட தொண்டனின் கனவாகும்" என்றார்.

இதையும் படிங்க: சஞ்சனாவின் தூய அன்புக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்

Last Updated : Jul 4, 2021, 11:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.