ETV Bharat / state

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை ஆர்ப்பாட்டம் - பாஜக

author img

By

Published : Nov 19, 2019, 7:13 AM IST

திருவள்ளூர்: பிரதமர் மோடியை அவதூறாக பேசிய ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இருவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

bjp

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல்காந்தி, பிரதமர் மோடியை 'திருடன்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுதொடர்பாக பாஜக-வின் செய்திதொடர்பாளர் மீனாட்சி லேகி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்காலத்தில் ராகுல் காந்தி எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என உத்தரவிட்டனர். இந்நிலையில் மோடியை அவதூறாக பேசிய ராகுல் காந்தியை நீதிமன்றம் எச்சரித்துள்ளதால், அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க கோரியும், காங்கிரஸ் தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதை கைவிடக் கோரியும் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டம் நடத்தும் பாஜகவினர்

இதில், மாநில செயலாளர் கரு. நாகராஜ், திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார், அஸ்வின், மாவட்ட செயலாளர் பாலாஜி, கருணாகரன், திருவள்ளூர் மாவட்ட நகர தலைவர் சதீஷ், பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:

’ரஃபேல் வழக்கில் கற்பனைக் கதைகளை கட்டுவதை காங்கிரஸ் தவிர்க்கணும்’ - வானதி சீனிவாசன்

Intro:18-11-2019

திருவள்ளூர் மாவட்டம் ரயில் நிலையம் அருகில் காங்கிரஸ் மற்றும் திமுகவினரை கண்டித்து பாஜக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Body:18-11-2019

திருவள்ளூர் மாவட்டம் ரயில் நிலையம் அருகில் காங்கிரஸ் மற்றும் திமுகவினரை கண்டித்து பாஜக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ரஃபேல் போர் விமானமும் வாங்கியதில் குற்றம் சுமத்திய ராகுல் காந்தியும் ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்



பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்திய ராணுவத்திற்கு
ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சுமத்திய
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் திமுக தலைவர் ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநில செயலாளர் கரு நாகராஜ் திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் மற்றும் அஸ்வின் மாவட்ட செயலாளர் பாலாஜி ..கருணாகரன் திருவள்ளூர் மாவட்ட...நகர தலைவர் சதீஷ்
மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.