ETV Bharat / state

State level mens competition: மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு ரூ.1 லட்சம் பரிசு

author img

By

Published : Dec 27, 2021, 11:31 PM IST

State level mens competition: பட்டாபிராமில் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.

ஆணழகன் போட்டி
ஆணழகன் போட்டி

State level mens competition: திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி பட்டாபிராம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு அமைச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் கனகு கிளாசிக் உடற்பயிற்சி கூடம் இணைந்து தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக ஒரு லட்சம் சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டியானது நடைபெற்றது. இதில் 11 பிரிவுகள் சீனியர், மேன்பிசிக், பிசிக்ஸ் ஓவரா சாம்பியன் உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 272க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆணழகன் போட்டியில் தங்களது கட்டமைப்பான உடல்களை பல்வேறு வடிவங்களில் காண்பித்து திறமைகளை போட்டியாளர்கள் வெளிக்காட்டினர்.


கும்பகோணம் மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் முதலிடம் பிடித்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் இரண்டாமிடம் பிடித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆண்ட்ரூஸ் மூன்றாம் இடம் பிடித்தார்.

முதலிடம் பிடித்த ஈஸ்வருக்கு ஒரு லட்ச ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் மிஸ்டர் இந்தியாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், அர்ஜுனா விருது பெற்ற மிஸ்டர் வேர்ல்ட் பாஸ்கரன் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

இதையும் படிங்க: Competitive examination: அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.