ETV Bharat / state

பேரறிவாளனை போல் சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் - சீமான்

author img

By

Published : May 19, 2022, 9:42 AM IST

Updated : May 19, 2022, 12:27 PM IST

ராஜிவ் காந்தி வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை போல் சிறையில் உள்ள மற்றவர்களையும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

seeman-request-to-cm-stalin-to-change-name-of-tamil-nadu-to-dravida-nadu விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குங்கள்.. அதன் பிறகு ஈழம் பெற்று கொடுங்கள் - சீமான் முழக்கம்
seeman-request-to-cm-stalin-to-change-name-of-tamil-nadu-to-dravida-nadu விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குங்கள்.. அதன் பிறகு ஈழம் பெற்று கொடுங்கள் - சீமான் முழக்கம்

திருவள்ளூர்: , மே 18 இன படுகொலை நாள் மாபெரும் இன எழுச்சி பொது கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பூந்தமல்லியில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே உள்ள நசரத்பேட்டையில் நேற்று இரவு (மே.18) நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ஈழ படுகொலை சுவடுகள் என்ற புத்தகத்தையும், ஒலி நாடா ஆகியவற்றை வெளியிட்டார்.

பின்னர் மலர் வணக்கம் மற்றும் சுடர் ஏற்றி, கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக பறை இசைக்கப்பட்டு, பாரம்பரிய கலைகள் செய்து காட்டப்பட்டதுடன் ஈழம் குறித்த பாடல்கள் பாடப்பட்டது. பின்னர் உப்பில்லா கஞ்சியைக் குடித்தனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

அதன் பின்னர், இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கும் மகிந்தா ராஜபக்சேவிற்கு ஒன்றிய அரசு எந்த அடைக்கலமும் கொடுக்க கூடாது.
ஏழு பேரின் விடுதலை செய்யும் அமைச்சரவை தீர்மானத்தில் கையெழுத்து இடாமல் மூன்று ஆண்டுகள் காலம் தாழ்த்தி வந்த தமிழ்நாடு ஆளுனருக்கு இந்த கூட்டத்தின் வாயிலாக கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மே 18 மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் - சீமான் முழக்கம்
மே 18 மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் - சீமான் முழக்கம்

பின்னர் சீமான் பேசுகையில், "பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது. தொடர் சட்டம் மற்றும் அரசியல் போராட்டம் நடத்தினார். அவரே அவரது விடுதலையை சாத்தியப்படுத்தினார். இந்த தீர்ப்பு இந்த வழக்கில் சிறையில் உள்ள மற்ற அனைவருக்கும் பொருந்தும் அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இதற்கு தனியாகப் போராட்டம் செய்ய வைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

நான் வேலூர் சிறையில் இருக்கும் போது தான் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் வேலூர் சிறையில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் சிறையில் இருந்தது என்னால் தான் தெரியவந்தது. தொடர்ந்து போராடுவோம் ஏன் என்றால் நாங்கள் தமிழர்கள், நமக்கான முன்னோட்டம் அங்கு தொடங்கி விட்டது.

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குங்கள்.. அதன் பிறகு ஈழம் பெற்று கொடுங்கள் - சீமான் முழக்கம்

மெயின் பிக்சர் பல மணி நேரம் ஓடும். நூல் விலையேற்றத்தால் திருப்பூரில் போராட்டம் நடக்கிறது. இங்கு சொத்து வரி உயர்த்தி உள்ளனர். ஆம்பூரில் பிரியாணி திருவிழா மாட்டு கறிக்கு தடை என்பதால் பிரியாணி விருந்துக்குத் தடை போடப்பட்டது. பிரதமரிடம் சொல்லுங்கள் மாட்டு கறி ஏற்றுமதியை நிறுத்துங்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் வேலை தூக்கும் போது விமர்சனம் செய்தார்கள். அதே வேலை பாஜக எடுத்த போது பாராட்டியது. அதானிக்காக தான் அங்கு இவ்வளவு வேலை நடக்கிறது. எங்களுக்கு குடியுரிமை பெற்று கொடுங்கள், அதன் பிறகு ஈழம் பெற்று கொடுங்கள்.

விடுதலை புலிகள் மீதான தடை நீக்குங்கள். நாங்கள் போராடி உரிமையை பெற்று கொள்வோம், முதலில் என்னுடைய பாஸ்போர்ட் மீதான தடையை நீக்குங்கள் எங்கள் விடுதலைக்கான தொடக்கம் ஐ.நாவில் உள்ளது. பாஜக தான் நாம் தமிழர் கட்சியின் "பி" டீமாக செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் தன் வாயால் கெடுகிறது. பாஜகவிற்கு சாதிகள் இரண்டு கண்கள்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி திராவிட நாடு என பெயர் வையுங்கள். ஊர் ஊராக சென்று பயணம் செய்ய போகிறேன். 2026 ல் நாம் தமிழர் அரசை மலர செய்வோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரு தாயின் வெற்றி - பேரறிவாளனை மீண்டும் ஈன்ற அற்புதம்மாள்!

Last Updated : May 19, 2022, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.