ETV Bharat / state

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர் திறப்பு

author img

By

Published : Feb 11, 2020, 6:40 PM IST

திருவள்ளூர்: கிருஷ்ணா நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டத்தின்படி, கண்டலேறு அணையில் இருந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

pundi-reservoir-in-thiruvallur-district
pundi-reservoir-in-thiruvallur-district

கிருஷ்ணா நதிநீர்ப் பங்கீட்டு திட்டத்தின்படி, கண்டலேறு அணையில் இருந்து திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு, வந்துகொண்டிருக்கிறது.

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் உயரம் 35 அடி, மொத்தக் கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி. நேற்று மாலை நிலவரப்படி அணையில் உள்ள நீர் மட்டம் 30. 32 அடி. அதேபோல் 1,816 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறப்பு

இதன் காரணமாக சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து புழல் ஏரி லிங்க் கால்வாய் மூலம் விநாடிக்கு, 515 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீரானது சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவைக்காக, புழல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்த பின்னர், சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து மட்டுமே தண்ணீரானது அனுப்பப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:'பொதுவுடைமைவாதி' சிங்காரவேலரின் 74ஆவது நினைவு தினம் - மாலை அணிவித்து மரியாதை

Intro:திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்துகொண்டிருக்கிறது.Body:12-02_2020

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்துகொண்டிருக்கிறது.

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் உயரம் 35 அடி மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி நேற்று மாலை நிலவரப்படி அணையில் உள்ள நீர் மட்டம் 30 .32 அடியாக பதிவானது 1816 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது .இதன் காரணமாக சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து புழல் ஏரி லிங்க் கால்வாய் மூலம் வினாடிக்கு 515 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரானது சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக பூழல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்த பின்னர் நீரானதுசென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து மட்டுமே தண்ணீரானது அனுப்பப்பட்டு வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.