ETV Bharat / state

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்!

author img

By

Published : Jan 21, 2020, 9:19 AM IST

திருவள்ளூர்: ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

poxco act
poxco act

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே உள்ள உத்திரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் (60). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடைக்கு வந்த ஐந்து வயது சிறுமியை பிஸ்கட் தருவதாகக் கூறி தனது கடைக்குள் அழைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்

அச்சிறுமி அழுதுகொண்டு நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து ராமதாஸ் மீது கவரபட்டை காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவரப்பேட்டை காவல் துறையினர் ராமதாசை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்புணர்வு - இளைஞருக்கு ஆயுள்

Intro:திருவள்ளூர் மாவட்டம்

பெட்டிக்கடையில் வைத்து 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் ராமதாஸ் (60) போக்சோ சட்டத்தில் கைது கவரைப்பேட்டை போலிசார் நடவடிக்கைBody:


திருவள்ளூர் மாவட்டம்

பெட்டிக்கடையில் வைத்து 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் ராமதாஸ் (60) போக்சோ சட்டத்தில் கைது கவரைப்பேட்டை போலிசார் நடவடிக்கை


திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே உத்திர குளம் பகுதியை சேர்ந்த ராமதாஸ்(60) என்பவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் இன்று கடைக்கு வந்த 5 வயது சிறுமியை பிஸ்கட் தருவதாக கூறி தனது கடைக்குள் அழைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார் அச்சிறுமி அழுதுகொண்டு நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து ராமதாஸ் மீது கவரபட்டை காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவரப்பேட்டை காவல்துறையினர் ராமதாசை கைது செய்து 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து புழல் சிறையில் அடைத்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.