ETV Bharat / state

‘திருவள்ளுர் மாவட்டம்’ என்ற தலைப்பில் ஊட்டச்சத்து தோட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கு!

author img

By

Published : Dec 18, 2020, 1:09 PM IST

திருவள்ளுர்: திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முழுமையான ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கி ‘திருவள்ளுர் மாவட்டம்’ என்ற தலைப்பில், ஊட்டச்சத்து தோட்டம் விழிப்புணர்வு தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

வேளாண்மை அறிவியல் நிலையம்
வேளாண்மை அறிவியல் நிலையம்


திருவள்ளுர் மாவட்டம் திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முழுமையான ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கி திருவள்ளுர் மாவட்டம் என்ற தலைப்பில், ஊட்டச்சத்து தோட்டம் விழிப்புணர்வு தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா தலைமை தாங்கிய கருத்தரங்கில், உலக சுகாதார அமைப்பு முதன்மை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

அப்பொழுது ஆட்சியர் பொன்னையன் கூறுகையில், “திருவள்ளூர் மாவட்டத்தில் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 55 விழுக்காடு ரத்த சோகையினாலும், 30 விழுக்காடு வளர்ச்சி குன்றியவர்களாகவும் மற்றும் 23.3 விழுக்காடு எடை குறைபாடு உள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இச்சூழ்நிலையைக் களைய கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமூக பொருளாதார நிலை, ஊட்டச்சத்து நிலையை மதிப்பிட்டு ஊட்டச்சத்து பற்றிய அறிவு மற்றும் சுய வேலைவாய்பை உருவாக்குவதன் மூலம் மட்டுமே ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்க முடியும்" என்றார்.

இதில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஆர். சம்பத் குமார், வேளாண்மை அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பி. சாந்தி, வேளாண்மை துணை இயக்குநரும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான எபிநேசர், துணை இயக்குநர்கள் சுரேஷ், எம். பாஸ்கரன், முரளி, ஹரிஹரன், ஜவஹர்லால், வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...நாடகம் வேண்டாம்; வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்! - மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.