ETV Bharat / state

தியாகராஜர் திருக்கோயிலில் நிறைவுற்றது ’நாட்டியாஞ்சலி’

author img

By

Published : Feb 25, 2020, 10:18 AM IST

திருவாரூர்: தியாகராஜர் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்றுவந்த நாட்டியாஞ்லி நிகழ்ச்சி நேற்று (திங்கள்கிழமை) நிறைவுற்றது.

natiyanjali
natiyanjali

சிவனுக்கு உகந்த மிக சிறப்பான நாளான மகா சிவராத்திரியை முன்னிட்டு, அனைத்து சிவாலய திருக்கோயில்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி கடந்த சில நாட்களாக நடைபெற்றுவந்தது.

நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று (திங்கள்கிழமை) காரைக்கால், சென்னை, மலேசியா, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த, பரதநாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம், மோகினி ஆட்டம், சிவாலய நாடகங்களை அரங்கேற்றினர்.

தியாகராஜர் திருக்கோயிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி

நிகழ்ச்சியின் இறுதியில் நாட்டிய கலைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு, நாட்டிய கலைஞர்கள், மாணவர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு நாட்டியாஞ்சலியை ரசித்தனர்.

இதையும் படிங்க: தியாகராஜர் திருக்கோயிலில் 'சிவதாண்டவம்'



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.