ETV Bharat / state

மனைவிக்கு அரிவாள் வெட்டு - கணவர் காவல் நிலையத்தில் சரண்

author img

By

Published : Aug 13, 2021, 1:35 PM IST

திருவள்ளூரில் மனைவி, அவருடன் தொடர்பில் இருந்தவரை அரிவாளால் வெட்டிய கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கணவர் காவல் நிலையத்தில் சரண்
கணவர் காவல் நிலையத்தில் சரண்

திருவள்ளூர்: பாடியநல்லூரைச் சேர்ந்தவர்கள் லட்சுமணன் - லோகேஸ்வரி தம்பதி. எடப்பாளையம் பகுதியில் உள்ள ராஜ்குமார் என்பவரின் வெல்டிங் கடையில் லட்சுமணன் வேலை பார்த்துவந்துள்ளார்.

ராஜ்குமாருக்கும் லோகேஸ்வரிக்கும் திருமண பந்தத்திற்கு வெளியேயான உறவு இருந்துவந்ததாகவும் இதனை லட்சுமணன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெல்டிங் கடைக்கு லட்சுமணன் சென்றுள்ளார். அங்கு ராஜ்குமார், லோகேஸ்வரி ஆகியோர் பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனால் கோபமடைந்த லட்சுமணன் இருவரையும் அரிவாளால் வெட்டினார்.

இதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த லோகேஸ்வரி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து சோழவரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் லட்சுமணன் சோழவரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபா பிணை மனு - விசாரணையைத் தள்ளிவைத்த நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.