பனிமலர் கல்லூரியில் இளம் தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையூட்டும் கருத்தரங்கம்!

author img

By

Published : Oct 3, 2019, 5:56 AM IST

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் இளம் தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியும், வேர்ல்ட் ஹுய்மனிடேரியன் ட்ரைவ் (WHD) என்ற சர்வதேசத் தொண்டு அமைப்பும் இணைந்து இளம் தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

கல்லூரியின் தலைவர் சின்னதுரை தலைமையில் மலேசிய தூதுரக தலைவர் சரவணன் கராதிஹ்யான், ரஷ்ய தூதுரக உயர் அலுவலர் அலெக்சேய் இல்லுவியேவ், மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி உள்ளிட்டோர் கலந்துகொண்டு நாளைய தலைமுறையினர், வேலை வாய்ப்பு, சுய தொழில், நன்னடத்தை வாழ்க்கை நெறி முறைகள் ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகளைக் கூறினார்.

தன்னம்பிக்கையூட்டும் கருத்தரங்கம்

இந்த கருத்தரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இதையும் படிங்க: கரைவேட்டி கலைஞரும் ஒரு தமிழன்தான் - கனிமொழி

Intro:பூவிருந்தவல்லி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் நாளை இளம் தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையூட்டம் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

Body:பூவிருந்தவல்லி அருகே உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரி மற்றும் World Humanitarian Drive (WHD)" என்ற சர்வதேச தொண்டு அமைப்பு இணைந்து
நாளை இளம் தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையூட்டம் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் கல்லூரியில் நடைபெற்றது.கல்லூரி தலைவர் சின்னதுரை தலைமையில் மலேஷியா தூதுரக தலைவர் சரவணன் கராதிஹ்யான்,ரஷ்யா தூதுரக உயர் அதிகாரி அலெக்சேய் இல்லுவியேவ்,இங்குலாந்தின், க்ரோயடோன் தூதர் அப்துல் பாசித் சையத் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் நாவஸ் கனி
ஆகியோர் கலந்து கொண்டு நாளைய தலைமுறையினர் வேலை வாய்ப்பு, சுய தொழில் ,நன்னடத்தை மற்றும் வாழ்க்கை நெறி முறைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினர்.இந்த கருத்தரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.Conclusion:பின்னர் செய்தியாளர்களை சந்தித்த WHD கூட்டமைப்பினர் வரும் ஆண்டு செப்டம்பர் 30 அறநெறி கல்வி தினமாக கடைபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது.இதற்காக 10ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.இந்த முயற்சியை ஐநா அங்கீகரிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.