ETV Bharat / state

சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Oct 5, 2021, 2:53 AM IST

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவையை நவம்பரில் துவங்காமல் டிசம்பரில் துவங்குவதை கண்டித்தும், ஆலை பராமரிப்பு சரியில்லாததை கண்டித்தும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சர்க்கரை
சர்க்கரை

திருவள்ளூர்: திருவாலங்காட்டில் இயங்கும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக அலுவலக நுழைவு வாயிலின் முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நவம்பரில் அரவையை துவங்காமல் டிசம்பரில் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையில் இயந்திரங்களை புதுப்பிக்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆலையை டிசம்பர் மாதத்தில் திறப்பதை கைவிட்டு நவம்பர் 9ல் திறக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் 1 லட்சம் டன் கரும்பு தனியார் ஆலைக்கு அனுப்பப்படும் சூழல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அடுத்த வாரம் திங்கட்கிழமைக்குள் ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தொடர் போராட்டம் நடத்தப்படும் என கரும்பு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகிகள் விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், வரும் 11ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.