ETV Bharat / state

காவல் நிலையத்தில் புகார் அளித்த குடும்பம்: பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த அவலம்!

author img

By

Published : Jun 30, 2021, 3:28 PM IST

திருவள்ளூரில் சிறுமியை அவதூறாக பேசிய நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த பெற்றோரை, பஞ்சாயத்தில் வைத்து கிராம நிர்வாகிகள் காலில் விழ வைத்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் நிலையத்தில் புகார் அளித்த குடும்பம்
காவல் நிலையத்தில் புகார் அளித்த குடும்பம்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன மாங்காட்டில் வசித்து வருபவர் தேவராஜ். இவரது மனைவி குப்பம்மாள். இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சுண்ணாம்பு குளத்திலுள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் தனது மகள் ஆந்திர மாநிலம் தடாவிலுள்ள தனது உறவினரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.

அப்போது, முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேர், சிறுமி யாருடனோ திருமணம் செய்துகொண்டதாக பெரற்றோரிடம் வதந்தியை கிளப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்த தேவராஜ்-குப்பம்மாள் தம்பதியர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த ஆறு பேர் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பஞ்சாயத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள்:

ஆனால், சின்ன மாங்கோடு கிராம நிர்வாகிகள் கட்டப்பஞ்சாயத்து பாணியில் கிராமத்தை அவமதித்ததாக கூறி தேவராஜ்-குப்பம்மாள் குடும்பத்தினருடன் கிராமத்தில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டால் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும், கிராமத்தில் உள்ள பெட்டி கடையில் மளிகை பொருள்கள் வழங்கக் கூடாது, குடிநீர் வழங்க கூடாது என பல நிபந்தனை விதித்துள்ளனர்.

இந்த கட்டுப்பாடுகளை சகித்துக்கொண்டு 40 நாள்கள் காத்திருந்த தேவராஜ்-குப்பம்மாள் தம்பதியர் ஒரு கட்டத்தில் கிராமத்தினருடன் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிராம நிர்வாகிகள், கிராமத்தை மீறி வழக்கு தொடர்ந்ததால் சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்த நாலு பேரும் கிராம நிர்வாகிகளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என கூறியுள்ளனர்.

காலில் விழுந்த குடும்பம்:

பின்னர், சிறுமியின் தாய், தந்தை, அண்ணன் பாட்டி ஆகிய நான்கு பேரும் கண்ணீர் மல்க கிராம நிர்வாகிகளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். பின்னர் 75 ஆயிரம் ரூபாய் அபராதம், 6 பேர் மீது பதியப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சமூகநலத் துறை அலுவலர்கள் விசாரணை:

இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து மாவட்ட சமூக நலத் துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் காவல் துறையினர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு வந்த சமூகநலத் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த கிராம மக்கள், கிராம நிர்வாகிகள் யாரும் இல்லாததால் தாங்கள் யாரிடமும் பேச முடியாது எனக் கூறியுள்ளனர். இதனால், அங்கிருந்து கலைந்து சென்ற சமூக நலத் துறை அலுவலர்கள், இந்த விவகாரம் குறித்து ஓரிரு தினங்களில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊர் பஞ்சாயத்து முன்பு காலில் விழுந்த தந்தை, மகன் - விழவைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.