ETV Bharat / state

அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jul 19, 2021, 6:15 PM IST

வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எண்ணூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் ஆர்பாட்டம்
மீனவர்கள் ஆர்பாட்டம்

திருவள்ளூர்: அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் உள்ள ஐந்து அலகுகளில் தற்போது நாள் ஒன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் அங்கு மேலும் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான மூன்றாம் நிலை அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதற்காக எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து நிலக்கரி கொண்டுசெல்வதற்காக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கன்வேர்ட் பெல்ட் எனப்படும் சூழல் பட்டைத்தளம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

ஆற்றின் குறுக்கே சுழல்பட்டை அமைத்தால் நீர் ஓட்டம் தடைபட்டு மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழும் நிலை உள்ளதாகக் கூறப்படுக்கிறது.

மீனவர்கள் வேதனை

ஏற்கனவே அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் ஆற்றின் வழியாகக் கடலில் கலப்பதால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை எண்ணூர் பகுதி மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், ஆற்றை ஆக்கிரமித்து நடைபெறும் வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் அணிவகுத்து சென்னை எண்ணூர் பகுதி கட்டுமான பணிகள் நடைபெறும் வளாகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: 13 மாணவர் மரணத்திற்குக் காரணமாக இருந்தவர் பழனிசாமி - மா.சு. குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.