ETV Bharat / state

திருவள்ளூரில் திமுக அதிக இடங்களில் வெற்றி!

author img

By

Published : Jan 12, 2020, 6:58 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் மாவட்ட குழு தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது.

dmk
dmk

திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் பதவிகளில் திமுக 6 இடங்களையும், அதிமுக 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. துணைத்தலைவர் பதவிகளில் திமுக ஏழு இடங்களையும், அதிமுக, பாமக முறையே ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

திருவள்ளூர், பூந்தமல்லி, சோழவரம், புழல், வில்லிவாக்கம், மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றியக் குழு தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர். வில்லிவாக்கத்தில் பாமக உறுப்பினர் ஞானப்பிரகாசம் என்பவர் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடம்பத்தூர் ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த சுஜாதா சுதாகர் என்பவர் துணைத்தலைவராக தேர்வாகியுள்ளார்.

திருவள்ளூரில் வெற்றியை கொண்டாடும் திமுகவினர்

கும்மிடிப்பூண்டி, பூண்டி எல்லாபுரம், கடம்பத்தூர் ஆகிய இடங்களில் அதிமுகவினர் ஒன்றியக் குழு தலைவர் பதவியை கைப்பற்றினர். பூண்டி ஒன்றியத்தில் துணைத்தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவியதால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது. இதனால், துணைத்தலைவர் பதவி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவாலங்காடு, திருத்தணி, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் சரிசமமான அளவில் இருந்ததால் பிரச்னைகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து இந்த நான்கு ஒன்றியங்களிலும் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Intro:நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட குழு தலைவர் துணைத் தலைவர் ஆகிய பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது மேலும் ஒன்றிய குழு தலைவர் துணைத் தலைவர் பதவிகளையும் திமுகவே அதிக இடங்களில் கைப்பற்றியுள்ளது. நாலு ஒன்றியங்களில் திமுக அதிமுக சரிசம அளவில் இருந்ததால் அந்த ஒன்றியங்களில் தலைவர் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Body:நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட குழு தலைவர் துணைத் தலைவர் ஆகிய பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது மேலும் ஒன்றிய குழு தலைவர் துணைத் தலைவர் பதவிகளையும் திமுகவே அதிக இடங்களில் கைப்பற்றியுள்ளது. நாலு ஒன்றியங்களில் திமுக அதிமுக சரிசம அளவில் இருந்ததால் அந்த ஒன்றியங்களில் தலைவர் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தலைவர் துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் மாவட்ட குழு அலுவலகம் மற்றும் அந்தந்த பகுதி ஒன்றிய அலுவலகங்களில் இன்று நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட குழு தலைவராக திமுக மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணுவின் மகள் உமா மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணை தலைவராக திமுகவைச் சேர்ந்த தேசிங்கு என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் பதவிகளில் திமுக 6 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் கைப்பற்றியுள்ளது துணைத்தலைவர் பகுதிகளையும் திமுக 7 இடங்களை கைப்பற்றியுள்ளது அதிமுக ஒரு இடத்தையும் பாமக ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த ஜெயசீலி ஜெயபாலனும் துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த பறக்கத்துள்ளாஹ் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் பூந்தமல்லி ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் தலைவராகவும் திமுகவைச் சேர்ந்த பரமேஸ்வரி கந்தன் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் சோழவரம் ஒன்றியத்தில் தலைவராக திமுகவைச் சேர்ந்த ராசாத்தி என்பவரும் துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த வே கருணாகரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எல்லாபுரம் ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தலைவராகவும் அதிமுகவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புழல் ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த தங்கமணி என்பவர் தலைவராகவும் திமுகவைச் சேர்ந்த சாந்தி பாஸ்கர் துணைத்தலைவர் ஆகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் வில்லிவாக்கம் ஒன்றியத்தில் திமுகவை சேர்ந்த கிரிஜா என்பவர் தலைவராகவும் பாமகவை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் கடம்பத்தூர் ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த சுஜாதா சுதாகர் என்பவர் தலைவராகவும் திமுகவைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் மீஞ்சூர் ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த ரவி என்பவர் தலைவராகவும் திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த சிவகுமார் தலைவராகவும் திமுகவைச் சேர்ந்த மாலதி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் பூண்டி ஒன்றியத்தில் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார் துணைத்தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவியது சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதாலும் துணைத்தலைவர் பதவி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவாலங்காடு திருத்தணி ஆர்கே பேட்டை பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில் திமுக அதிமுகவினர் சரிசமமான அளவில் இருந்ததால் அந்த ஒன்றியங்களில் பிரச்சனைகள் எழுந்தன இதைத்தொடர்ந்து இந்த நாலு ஒன்றியங்களிலும் தலைவர் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.