ETV Bharat / state

மீண்டும் மீண்டும் சர்ச்சைகளுக்கு உள்ளாகும் திமுக அமைச்சர்கள்!

author img

By

Published : Jun 25, 2023, 10:19 AM IST

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர். காந்தி சர்ச்சைக்கு உள்ளானார்.

மீண்டும் மீண்டும் சர்ச்சைகளுக்கு உள்ளாகும் திமுக அமைச்சர்கள்!
மீண்டும் மீண்டும் சர்ச்சைகளுக்கு உள்ளாகும் திமுக அமைச்சர்கள்!

மீண்டும் மீண்டும் சர்ச்சைகளுக்கு உள்ளாகும் திமுக அமைச்சர்கள்!

திருவள்ளூர்: பட்டறைப்பெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற அனைவருக்கும் நேற்று(ஜூன் 24) பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற இப்பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட அளவில் பள்ளி மாணாக்கர்கள், கல்லூரி மாணாக்கர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் முதலமைச்சர் கோப்பைக்காக நடைபெற்ற 50 வகையான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற 1886 வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் ரூ.37.68 இலட்சம் மதிப்பீட்டிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் அமைச்சர் வழங்கி மாணவர்களைப் பாராட்டினார்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய ஆர். காந்தி, ''தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எனக்கு வழங்கிய இந்த அமைச்சர் பதவிக்கு நான் எந்தத் தகுதியும் கொண்டவன் இல்லை.

இதையும் படிங்க:மணிப்பூர் கலவரம் : அனைத்து கட்சியினர் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

எனக்கு இந்த துறையைப் பற்றி ஒன்றும் தெரியாது, தனக்கு காந்தி என்ற பெயர் உள்ள காரணத்தினால் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக ஆக்கினார்'' என்று மேடையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருந்த நிகழ்ச்சியில் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் சிந்தனை மட்டும் முழு ஈடுபாடு தான், இப்பதவியில் நான் இருக்கக் காரணம் எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மற்றும் ஆசிரியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தற்பொழுது திமுக அமைச்சர்கள் பேசுவது சர்ச்சை ஆகி வரும் நிலையில், அமைச்சர் ஆர். காந்தி நிகழ்ச்சியில் தனக்கு கொடுத்த துறையைப் பற்றி ஒன்றும் தெரியாது என சொன்னது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சமீபத்தில், அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டபோது, காலணி அணிந்து கொண்டு பங்கேற்ற சம்பவம் மீண்டும் ஒரு சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

மேலும் கடந்த மே தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்ணை ஒருமையில் திட்டியது மற்றும் இலவச மகளிர் பேருந்து திட்டம் பற்றி ”பெண்கள் எங்க போனாலும் ஓசி பஸ்ல தான போறீங்க” எனக் கூறியது என அமைச்சர் பொன்முடி சர்ச்சையில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.

இதையும் படிங்க:நெதர்லாந்தில் ஓட்டல் திறந்த ரெய்னா... இவர் மட்டுமல்ல இன்னும் நிறைய பேர் இருக்காங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.