ETV Bharat / sports

நெதர்லாந்தில் ஓட்டல் திறந்த ரெய்னா... இவர் மட்டுமல்ல இன்னும் நிறைய பேர் இருக்காங்க!

author img

By

Published : Jun 24, 2023, 10:49 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்திய உணவகம் என்ற பெயரில் உணவகம் திறந்து உள்ளார். இதன் மூலம் ஹோட்டல் தொழில் செய்யும் கிரிக்கெட்டர்கள் வரிசையில் ரெய்னாவும் இடம் பிடித்து உள்ளார்.

Raina
Raina

ஐதராபாத் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்திய உணவகம் என்ற உணவகத்தை திறந்து உள்ளார். ரெய்னாவுக்கு முன்பே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலர் உணவக தொழில் செய்து வருகின்றனர். சச்சின் தெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா, ஜாகீர் கான் உள்ளிட்டோர் ஹோட்டலில் தொழிலில் ரெய்னாவுக்கு முன்பு இருந்தே கொடி கட்டி பறந்து வருகின்றனர்.

கபில்ஸ் லெவன்: இந்திய அணிக்கு முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று தந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ், கடந்த 2008 ஆம் ஆண்டு பாட்னாவில் லெவன் என்ற பெயரில் ஒரு உணவகத்தைத் திறந்தார். இந்திய, பான் ஏசியா மற்றும் கான்டினென்டல் உணவுகள் இந்த உணவகத்தில் வழங்கப்படுகின்றன. உணவகத்திற்குள் நுழைந்தவுடன் மைதானத்திற்குள் நுழைந்தது போல் உணர்வதற்காக கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் கோப்பைகளின் வடிவில் உணவகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

ஜட்டு புட் பீல்டு: இந்திய அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களில், ரவீந்திர ஜடேஜா 10 ஆண்டுகளுக்கு முன்பே ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து ஜட்டு ஃபுட் ஃபீல்ட் என்ற உணவகத்தைத் தொடங்கினார். கடந்த 2012ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உணவகத்தை தொடங்கினார். இந்தியா, மெக்சிகன், சீன, தாய், கான்டினென்டல் மற்றும் பஞ்சாபி உணவு வகைகள் இந்த உணவகத்தில் வழங்கப்படுகின்றன.

ஒன்8 கம்யூன்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒன்8 கம்யூன் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். டெல்லி மற்றும் கொல்கத்தாவில் ஒன்8 கம்யூன் உணவகங்கள் உள்ளன. உள்ளூர், வெளிநாட்டு உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்கள் என அனைத்து டிஷ்களும் இங்கு கிடைக்கும். தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து அவர் இந்த உணவகத்தை தொடங்கினார்.

டைன் பைன் : முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் ஹோட்டல் துறையின் மீது அதிக அன்பு கொண்டவர். 2005ஆம் புனேவில் டைன் பைன் என்ற உணவகத்தைத் தொடங்கினார். 2013ஆம் ஆண்டு புனேவில் உள்ள டாஸ் ஸ்போர்ட்ஸ் லாஞ்சை நிறுவனத்தையும் விரிவுபடுத்தினார்.

சச்சின்ஸ்: கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் சமையலிலும் சச்சின் தெண்டுல்கர் மாஸ்டராக வலம் வருகிறார். சமீபகாலமாக ஜாலியாக சமையல் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்த சச்சின், உணவகம் ஒன்றை தொடங்கினார். 'சச்சின்ஸ்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட உணவகம், தோல்வியின் காரணமாக பாதியிலேயே மூடப்பட்டது.

மினிஸ்ட்ரி ஆப் கிராப் : இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மஹேல ஜெயவர்த்தனே, குமார் சங்கக்கார மற்றும் பிரபல சமையல்காரர் தர்ஷன் முனிதாசா ஆகியோர் கூட்டாக இணைந்து உணவகங்களை திறந்து உள்ளனர். அவர்கள் ஷாங்காய், மணிலா, கொலம்பியா, செங்டு, பாங்காக் மற்றும் மும்பையில் உணவகங்களைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி.. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.