ETV Bharat / state

நெல்லை அருகே பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

author img

By

Published : Apr 23, 2022, 8:11 AM IST

Updated : Apr 23, 2022, 1:09 PM IST

நெல்லை அருகே கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேசா
உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேசா

நெல்லை: நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மார்க்ரெட் திரேசா. இவர் நேற்றிரவு (ஏப். 22) சுத்தமல்லி அடுத்த பழவூரில் கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேசாவை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் உதவி ஆய்வாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேசா
உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேசா

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் , சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேசா வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஆறுமுகம் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு அபராதம் விதித்துள்ளார். அந்த பகையை மனதில் வைத்து நேற்று பணியில் இருந்தபோது கையில் இருந்த சின்ன கத்தியால் மார்க்ரெட் திரேசாவை ஆறுமுகம் குத்தியுள்ளார்.

குற்றவாளி ஆறுமுகம்
குற்றவாளி ஆறுமுகம்

இதையடுத்து ஆறுமுகத்தை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டது, பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடி குண்டு வெடிப்பு என அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு.. பதறவைக்கும் பட்டப்பகல் காட்சிகள்...

Last Updated : Apr 23, 2022, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.