ETV Bharat / state

நெல்லையில் பெண் காவலர் தற்கொலை முயற்சி: பணிச்சுமை காரணமா?

author img

By

Published : Nov 8, 2021, 4:16 PM IST

திருநெல்வேலியில் உயர் அலுவலர்கள் அளித்த நெருக்குதல்கள் காரணமாக உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மீண்டும் பெண் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

திருநெல்வேலி: மாநகர காவல் துறையில் பாளையங்கோட்டை போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர், மகேஸ்வரி.

இவர் நேற்று (நவ.7) திடீரென அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மகேஸ்வரி சிகிச்சைப் பெற்று வருகிறார். பணிச்சுமை காரணமாகவும் உயர் அலுவலர்களின் நெருக்குதல்கள் காரணமாகவும் மகேஸ்வரி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாளையங்கோட்டை போக்குவரத்துப் பிரிவில் ஆள் பற்றாக்குறை அதிகளவு இருப்பதால், போக்குவரத்து காவலர்களுக்கு மிகுந்த பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. பாளையங்கோட்டை எப்போதுமே நெருக்கடியுடன் காணப்படும், ஆனால் பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் துறையில் மிகக் குறைந்த அளவிலேயே காவலர்கள் பணியாற்றுகின்றனர்.

ஏற்கெனவே நெல்லை மாநகரில் பணிபுரியும் அனைத்துக் காவலர்களுக்கும் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

பெண் காவலர் தற்கொலை முயற்சி

மாநகர காவல் துறை உயர் அலுவலர்கள் நெருக்குதல்களின் காரணமாக காவலர்கள் பலர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அருணாச்சலம் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வரை சென்றது. இருப்பினும் அடுத்தடுத்து இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக, நெல்லை மாநகரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியது.

ஹை கிரவுண்ட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி கடந்த மாதம் 27ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

உயர் அலுவலர் திட்டியதன் காரணமாகவே பழனி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். தமிழ்நாடு அரசு உத்தரவின்படி காவலர்களுக்கு வார விடுமுறை நெல்லை மாநகரில் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பணிச்சுமை காரணமா?

இதுபோன்ற சூழ்நிலையில் பெண் காவல் ஆய்வாளர் பணிச்சுமை காரணமாக தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நெல்லை மாநகர காவல் துறையில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் ஆய்வாளர் மகேஸ்வரி கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது, தனது தந்தை உயிரிழந்த செய்தி கேட்டும் சுதந்திர தின அணிவகுப்பை தலைமையேற்று நடத்தி விட்டு, அதன்பிறகே தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.

இவரது கணவரும் நெல்லை நுண்ணறிவுப் பிரிவில் உதவி காவல் ஆய்வாளராக உள்ளார். இதுபோன்று காவல் துறையில் நற்பெயர் எடுத்த அலுவலர்கள் மனம் தளர்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்யும் சம்பவம் சமூக ஆர்வலர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மெரினாவில் கருணாநிதி நினைவிடம் - அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.