ETV Bharat / state

கல்குவாரி விபத்து கைக்குழந்தையுடன் மயங்கி விழுந்த பெண்!

author img

By

Published : May 16, 2022, 10:14 PM IST

கல்குவாரி விபத்தில் சிக்கி மீட்கப்படாமல் உள்ள செல்வக்குமார் குடும்பத்தினர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மனுகொடுக்க வந்தபோது கைக்குழந்தையுடன் மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்குவாரி விபத்து கைக்குழந்தையுடன் மயங்கி விழுந்த பெண்!
கல்குவாரி விபத்து கைக்குழந்தையுடன் மயங்கி விழுந்த பெண்!

நெல்லை அருகே அடைமிதிப்பான் குளம் பகுதியில் தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் பாறை சரிந்து ஏற்பட்ட விபத்தில் நாங்குநேரி அருகே காக்கைகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பைச் சேர்ந்த ராஜேந்திரன், இளையநயினார் குளத்தை சேர்ந்த செல்வம், விட்டிலாபுரத்தைச் சேர்ந்த முருகன், நாட்டார்குளத்தைச் சேர்ந்த விஜய், ஆயன் குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன் ஆகிய 6 பேர் பாறை இடிபாட்டில் சிக்கிக்கொண்டனர்.

விபத்தில் சிக்கி லேசான காயமடைந்த விட்டிலாபுரத்தைச் சேர்ந்த முருகன், விஜய் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாறை சரிந்து விழுந்து பொக்லைன் இயந்திரத்தில் சிக்கிய செல்வம் என்பவர் நேற்று மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கல்குவாரியில் சிக்கிய மேலும் 3 பேரை தேசியப் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் முகாமிட்டுத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கல்குவாரியில் சிக்கியுள்ள நாங்குநேரி தாலுகா காக்கைகுளத்தைச் சேர்ந்த செல்வகுமார் மனைவி சேர்மகனி, தாய், தந்தை, மாமனார், மாமியார், ஒன்றரை வயது குழந்தை மற்றும் உறவினருடன் நெல்லை ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க திரண்டு வந்தனர். அவர் இல்லாததால் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலரைச் சந்தித்து மனு கொடுத்து விட்டு, வரும் போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செல்வகுமாரின் மாமியார் பேச்சியம்மாள் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்குவாரி விபத்து கைக்குழந்தையுடன் மயங்கி விழுந்த பெண்!

அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து அவருக்கு உதவினர். மாமனார் வீரன் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அவர் கூறும்போது, “ எனது மகளின் கணவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. எனது மகள் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் தவித்து வருகின்றார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நெல்லை கல்குவாரி விபத்து: பாறைகள் தொடர்ந்து சரிந்து விழுவதால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.