ETV Bharat / state

நானும் ரவுடிதான், சட்டையை கழற்றினால்??? முன்னாள் ராணுவ வீரரிடம் அலப்பறை செய்த அரசு பஸ் டிரைவர்!

author img

By

Published : May 30, 2023, 1:40 PM IST

பேருந்தை நிறுத்தத்தில் நிறுத்த மறுத்த ஓட்டுனரை வழி மறித்து கேள்வி கேட்ட இராணுவ வீரரால் பரபரப்பு ஏற்பட்டது.

நானும் ரவுடிதான், சட்டையை கழற்றினால்??? முன்னாள் ராணுவ வீரரிடம் அலப்பறை செய்த அரசு பஸ் டிரைவர்!
நானும் ரவுடிதான், சட்டையை கழற்றினால்??? முன்னாள் ராணுவ வீரரிடம் அலப்பறை செய்த அரசு பஸ் டிரைவர்!

நானும் ரவுடிதான், சட்டையை கழற்றினால்??? முன்னாள் ராணுவ வீரரிடம் அலப்பறை செய்த அரசு பஸ் டிரைவர்!

திருநெல்வேலி: நெல்லை, திசையன்விளையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு விரைவு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல ஆணை உத்தரவு இருந்தும் திசையன்விளையில் இருந்து நெல்லைக்கு எந்த நிறுத்தத்திலும் நிற்காமல் சென்று வருகிறது. இந்த நிலையில், முன்னாள் இராணுவ வீரரான தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த கணேஷ் ராஜா (வயது 65) என்பவர், பரப்பாடி பஸ் நிலையத்தில் நெல்லைக்கு செல்வதற்காக நின்றபோது இந்த பஸ் வந்துள்ளது.

எனவே பேருந்தில் ஏறுவதற்காக அவர் பேருந்தை கைகாட்டி நிறுத்த முயன்றுள்ளார். பேருந்தை நிறுத்த கைகாட்டியதை பார்த்தும் டிரைவர் பஸ்சை நிற்காமல் நெல்லையை நோக்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இராணுவ வீரரான கணேஷ் ராஜா தனது பைக்கில் அந்த பேருந்தை பின் தொடர்ந்து நான்குநேரி அருகே உள்ள ரயில்வே கேட் அருகே பஸ்சை மறித்துள்ளார். பின்னர் டிரைவரிடம் பரப்பாடியில் பேருந்தை நிறுத்தத்தாமல் சென்றதற்கான காரணத்தை கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, பேருந்தின் உள்ளே இருந்த பயணிகள் டிரைவருக்கு சாதகமாக களம் இறங்கி கணேச ராஜாவை தாக்க முற்பட்டனர். அப்பொழுது அங்கு இருந்த பொதுமக்கள் துணையுடன் அந்த பஸ்சை வழி மறித்து நிறுத்தியதால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், இச்சம்பவம் குறித்து நான்குநேரி டி.எஸ்.பி ராஜுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.எஸ்.பியிடம் கணேஷ் ராஜா தான் முன்னாள் ராணுவத்தில் பணியாற்றியதாகவும் தற்போது ஓய்வு பெற்ற நிலையில் இருக்கும் எனக்கே இந்த நிலையா? எனக் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் டிரைவரிடம் பேருந்தை எடுத்து செல் என்று கூறியதை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் சரவணன் கணேஷ் ராஜாவிடம் ‘நானும் ரவுடிதான், சட்டையை கழற்றினால்’ என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் போலீசார் சமரசம் முயற்சில் ஈடுபட்டதை அடுத்து கணேஷ் ராஜாவை பேருந்தில் எறினார். அதையடுத்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மேலும், சில நாட்களுக்கு முன்பு நாங்குநேரி ஊருக்குள் வர மறுத்த அரசு பஸ் மற்றும் பயணிகளுக்குள் ஏற்பட்ட மோதலை சமாளிக்க முடியாத கண்டக்டர் தரையில் விழுந்து உருண்ட நிகழ்ச்சியை தொடர்ந்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாங்குநேரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பஸ் பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டு இருப்பதாகவும், ஆனால் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை மாவட்ட கலெக்டர் அனைத்து பேருந்துகளும் உரிய நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும், மீறினால் பஸ்சின் உரிமம் ரத்து செய்யப்படும் என உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவிற்கு மரியாதை இல்லாத நிலையில், சாதாரண பயணிகளின் நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிர்வாக சீர்கேட்டால் இப்படி பயணிகள் அவதி படுகிறார்கள் என்றும் இதற்கு பின்னர் கலெக்டர் விதிகளை மீறி இயக்கப்பட்டு வரும் அனைத்து அரசு பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாங்குநேரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: திருச்சியில் தொடர் கதையாகி வரும் தங்கம் கடத்தல்.. ஹேர் டை கிரைண்டர் தங்கம் கடத்திய நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.