ETV Bharat / state

வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல் பதின்பருவத்தில் கர்ப்பமான மாணவி: போக்சோவில் கைதான இளைஞர்

author img

By

Published : Apr 4, 2022, 3:31 PM IST

திருநெல்வேலி அருகே 11ஆம் வகுப்பு மாணவிக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணமான சம்பந்தப்பட்ட இளைஞரை காவலர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

வாழ்க்கையை புரிந்துகொள்ளா மாணவி: போக்சோவில் கைதான இளைஞர்
வாழ்க்கையை புரிந்துகொள்ளா மாணவி: போக்சோவில் கைதான இளைஞர்

திருநெல்வேலி: நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்மாணவியின் கிராமத்தில் நடந்த கோயில் கொடை விழாவிற்கு சவுண்ட் சர்வீஸ் வேலை செய்வதற்காக பணகுடியைச் சேர்ந்த இசக்கியப்பன் என்ற மஸ்தான் என்பவர் வந்துள்ளார்.

அந்தக் கிராமத்தில் மூன்று நாள்கள் தங்கியிருந்து சவுண்ட் சர்வீஸ் பணியை கவனித்து வந்துள்ளார். அப்போது அந்நபருக்கும், மாணவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் மாணவிக்கும், இசக்கியப்பனுக்கும் இடையே நெருக்கம் அதிகமானதாகவும் அவர்கள் தனிமையில் சந்தித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு அந்த மாணவிக்கு வயிறுவலி ஏற்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தில் கைதான இசக்கியப்பன் என்ற மஸ்தான்
போக்சோ சட்டத்தில் கைதான இசக்கியப்பன் என்ற மஸ்தான்

சீர்கெடும் இளசுகள்: மாணவியின் பெற்றோர், அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், மாணவியின் வயிற்றில் நீர்க்குமிழிகள் இருப்பதாகவும், வேறொன்றும் பிரச்னை இல்லை எனவும் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று(ஏப். 03) மாணவிக்கு மீண்டும் வயிறு வலி ஏற்படவே, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்தனர். பின்பு சிறிது நேரத்தில் மாணவிக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது.

இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மருத்துவர்கள் நாங்குநேரி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நாங்குநேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில் இசக்கியப்பன் என்பவருடன் ஏற்பட்ட நட்பினால்தான் இதுபோன்று நடந்ததாக மாணவி கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து நேற்று தனிப்பிரிவு காவலர்கள், பணகுடியில் வைத்து இசக்கியப்பனை கைதுசெய்து நாங்குநேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். தற்போது அவரை போக்சோ சட்டத்தின்கீழ், காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 'ரயில் நிலையத்தில் பெண்ணை முத்தமிட்டவருக்கு 7 ஆண்டுகள் கழித்து சிறை!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.