ETV Bharat / state

ட்விட்டரில் லீவு கேட்கும் மாணவர்கள்! - ஆட்சியர் கலகல பேச்சு

author img

By

Published : Nov 17, 2022, 7:06 PM IST

தற்போது ட்விட்டரில் மாவட்ட ஆட்சியர்களையே டாக் செய்து பள்ளி மாணவர்கள் மழை விடுமுறை கேட்பது டிரெண்டாகி வருகிறது என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலகலப்பாகப் பேசியுள்ளார்.

’ட்விட்டரில் என்னையே டாக் செய்து மாணவர்கள் விடுமுறை கேட்கிறார்கள்..!’ - ஆட்சியர் விஷ்ணு
’ட்விட்டரில் என்னையே டாக் செய்து மாணவர்கள் விடுமுறை கேட்கிறார்கள்..!’ - ஆட்சியர் விஷ்ணு

திருநெல்வேலி: கூகுள் மென்பொருள் வல்லுநர் கூட்டமைப்பு நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான ஹேக்கத்தான் போட்டிகள் நெல்லை மண்டலம் சார்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(நவ.17) நடைபெற்றது . தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பாக நடைபெறும் இந்தப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

இதில் சுமார் 200 மாணவர்கள் பங்கேற்றனர் போட்டியை துவக்கி வைத்து ஆட்சியர் விஷ்ணு பேசும்போது , “நெல்லை மாவட்டத்தில் இரவு பலத்த மழை பெய்தது. எனவே பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விட வேண்டுமா.., வேண்டாமா.. என அறிவிப்பதில் கஷ்டமான முடிவு எடுக்க வேண்டியிருந்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு பலத்த மழை பெய்தது காலை 6 மணிக்கு வாட்ஸ் அப்பில் தாலுகா வாரியாக மழை குறித்து ஆய்வு செய்ததன் மூலம் முடிவெடுப்பதில் மிகவும் கஷ்டமான சூழல் இருந்தது.

உடனே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக மழை இருக்கிறதா..?, என்று விசாரித்தேன். அங்கு மழை இல்லை எனவே விடுமுறை இல்லை என முடிவெடுத்து விட்டேன். அதற்குள் டுவிட்டரில் டேக் செய்து ஐயா இன்று விடுமுறை விடுங்கள் என்று கேட்கத் தொடங்கி விட்டனர். இப்படிப்பட்ட ஒரு குளிர்ச்சியான நாளில் நீங்கள் அனைவரும் வந்துள்ளீர்கள்” என்று கலகலப்பாக பேசினார்

தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு பேசும்போது, “தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழப்பு ஒரு லட்சம் பேரில் 64 பேர் உயிரிழந்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலும் கர்ப்பினி பெண்கள் உயிரிழப்பு அதிகமாக இருந்தது. எனவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயிரிழப்பை குறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டோம். அதன் விளைவாக தற்போது நெல்லையில் கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பு 60% ஆக குறைந்துவிட்டது.

எனவே, வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க தொழில்நுட்பம் பெரிதும் உதவியாக உள்ளது. முன்பெல்லாம் மழை பெய்தால் பயிர்கள் செழிக்கும் என்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் சமீபகாலமாக மழை பெய்தால் தங்களுக்கு விடுமுறை கிடைத்துவிடும் என்று மாணவர்கள் முதல் ஆளாக மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் ஆட்சியர்களிடம் மிக உரிமையோடு விடுமுறை குறித்து கேட்பது ஒரு வித டிரண்டாக உள்ளது” எனக் கலகலப்பாகப் பேசினார்.

’ட்விட்டரில் என்னையே டாக் செய்து மாணவர்கள் விடுமுறை கேட்கிறார்கள்..!’ - ஆட்சியர் விஷ்ணு

இதையும் படிங்க: வீதியில் படித்த போட்டி தேர்வர்களுக்காக நவீன சென்டர்.. நெல்லை ஆட்சியர் அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.