ETV Bharat / state

ஜப்பானில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தரக்கோரி உறவினர்கள் கோரிக்கை!

author img

By

Published : Sep 2, 2020, 9:03 PM IST

திருநெல்வேலி: ஜப்பான் நாட்டில் பணி புரிந்து வந்த தனது மகன் சந்தேகமான முறையில் உயிரிழந்ததையடுத்து, அவரது உடலை மீட்டுத்தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் முறையிட்டனர்.

relatives-demand-recovery-of-body-of-suspect-in-japan
relatives-demand-recovery-of-body-of-suspect-in-japan

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகன் மாதவன் தனியார் கல்லூரியில் படித்துவிட்டு, இரண்டு வருடங்களுக்கு முன்பு கல்லூரி மூலம் ஜப்பான் நாட்டிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார்.

இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 1) ஜப்பானிலிருந்து தொலைபேசி மூலம் முத்துசாமியை தொடர்பு கொண்ட ஒருவர், உங்கள் மகன் மாதவன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். ஆனால் அவர் எப்படி இறந்தார் என்ற விவரம் ஏதும் கூறவில்லை என தெரிகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த முத்துச்சாமி, அவரது உறவினர்கள், ஜப்பானில் சந்தேகமான முறையில் இறந்த தனது மகனின் உடலை மீட்டுத்தரக்கோரி ஆட்சியர் அலுவகலத்தில் முறையிட்டனர்.

இது குறித்து உயிரிழந்தவரின் சகோதரர் வேல்முருகன் கூறுகையில், எனது தம்பி இரண்டு வருடத்திற்கு முன்பு ஜப்பான் நாட்டில் வேலை பார்க்க சென்றான். திடீரென அவன் இறந்து விட்டதாக நேற்று எங்களிடம் தொலைபேசியில் தெரிவித்தனர். ஆனால் எப்படி இறந்தான் என்ற எந்த தகவலும் எங்களுக்கு வழங்கவில்லை. எனவே ஜப்பான் அரசிடம் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

ஜப்பானில் சந்தேகமான முறையில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தரக்கோரி உறவினர்கள் கோரிக்கை

அதனால் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து எனது தம்பியின் உடலை மீட்டுத்தர வேண்டும். அவரை எங்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும். கடைசியாக நேற்று காலை 9 மணிக்கு என்னிடம் எனது தம்பி மாதவன் பேசினார். அதன்பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:நெஞ்சை உலுக்கிய கொடைக்கானல் சம்பவம் - வீடியோ வெளியிட்ட நபர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.