ETV Bharat / state

மேய்ச்சல் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு - குடியரசு தினத்தில் மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

author img

By

Published : Jan 26, 2023, 7:47 PM IST

நெல்லை மாவட்டத்தில் தனியார் மின் உற்பத்தி திட்டத்திற்காக மேய்ச்சல் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து அலவந்தான்குளம் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

public protest
public protest

நெல்லை: நெல்லை மாவட்டம், மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அலவந்தான்குளம் கிராமத்தில் சுமார் 350 ஏக்கர் நிலம், ஒரு லட்சம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும், குடிநீர் ஆதாரப்பகுதியாகவும் உள்ளது.

இதனிடையே கங்கைகொண்டான் சிப்காட்டில் புதிதாக தொடங்கவுள்ள தனியார் சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்காக 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அலவந்தான்குளம் கிராமத்தில் 350 ஏக்கர் மேய்ச்சல் நிலங்களும் கையகப்படுத்துவதாக மக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அலவந்தான்குளம் கிராமத்தில், குடியரசு தினத்தையொட்டி இன்று(ஜன.26) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, 350 ஏக்கர் மேய்ச்சல் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து, கருப்புக் கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:போதையில் லஞ்சம் கேட்ட போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.