ETV Bharat / state

3ஆம் கட்ட சோதனைக்குப் பின்பே மக்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும் - திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

author img

By

Published : Jan 6, 2021, 3:33 PM IST

திருநெல்வேலி: கோவாக்சின் தடுப்பு மருந்தை மூன்றாம் கட்ட சோதனைக்கு உட்படுத்திய பின்பே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை வலியுறுத்தியுள்ளார்.

திமுக சட்டப்பேரவைத் உறுப்பினர் பூங்கோதை
திமுக சட்டப்பேரவைத் உறுப்பினர் பூங்கோதை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாப்பாக்குடி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் சட்டப்பேரவை நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட பணிகளைத் துரிதமாகச் செய்ய வலியுறுத்தி ஆலங்குளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவைச் சந்தித்து மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆலங்குளம் சட்டப்பேரவைக்குள்பட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடியில் உள்ள சில பகுதிகள், முக்கூடல் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும் என்றும், சட்டப்பேரவை நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட பணிகளைத் துரிதமாக முடிக்க வலியுறுத்தியும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை செய்தியாளர் சந்திப்பு

பொதுவாக தடுப்பூசி என்றாலே 70 முதல் 90 விழுக்காடு வரை செயல்திறன் இருந்தால்போதும், ஆனால் ஒரு தடுப்பு மருந்து மூன்று கட்டங்களாகச் சோதனைக்குள்படுத்தப்பட்டு அதன் செயல்திறன் என்ன என்பதை அறிந்த பின்னரே அதனைப் பயன்படுத்த வேண்டும்.

ஆனால் இந்தியாவில் போடப்பட இருக்கும் கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனைக்குள்படுத்தப்படாமலேயே போடப்படுகிறது. இது தவறு, உரிய பரிசோதனை செய்து அதன் செயல்திறனை அறிந்த பின்பே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கரோனா தடுப்பூசியான வோவாக்சின் கொண்டுவர வேண்டும் என்று மருத்துவர் என்ற அடிப்படையிலும், சட்டப்பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையிலும் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: தியேட்டர்களில் உருமாறிய கரோனா பரவும் விதம் - விளக்கும் அட்டவணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.