ETV Bharat / state

கோவை கார் வெடிப்பு சம்பவம்; நெல்லையில் மீண்டும் போலீசார் விசாரணை

author img

By

Published : Nov 1, 2022, 8:23 PM IST

கோவையில் கார் வெடித்த சம்பவம் தொடர்பாக நெல்லையில் மீண்டும் போலீசார் விசாரணை நடத்தினர்.

மீண்டும் போலீசார் விசாரணை
மீண்டும் போலீசார் விசாரணை

திருநெல்வேலி: கோவை உக்கடம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் வெடித்தது. இந்த வழக்கை காவல்துறை தொடர்ந்து விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. எனினும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் மாநகர காவல் துறை ஆணையர் அபினேஷ் குமார் உத்தரவின் பேரில் மேலப்பாளையம் பகுதியில் நான்கு வீடுகளிலும் பல்வேறு குழுக்களாக காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

மீண்டும் போலீசார் விசாரணை

மேலப்பாளையம் காதர் மூப்பன் தெருவை சார்ந்த சாஹிப் முகமது அலி (35), சையது முகமது புகாரி (36), முகமது அலி (38), முகமது இப்ராஹிம் (37) ஆகிய நால்வர் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை திருவிழாவில் வெடிகுண்டு வெடித்தது சம்பந்தமாக முகமது அலி, ஒரு இஸ்லாமிய அமைப்பிற்கு ஆன்லைன் மூலம் பணம் வசூலிக்க முயற்சி செய்ததாகவும் அது தொடர்பாக முகமது அலி உள்ளிட்ட நான்கு பேர் வீடுகளில் ஏற்கனவே தேசிய புலனாய்வு போலீசார் சோதனை மேற்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் மேலப்பாளையத்தில் உள்ள அந்த நான்கு பேர் வீடுகளிலும் தனித்தனியாக கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் நான்கு பேரின் செல்போன் மற்றும் குடும்பத்தினர் செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த செல்போனில் உள்ள எண்கள் அனைத்தையும் தங்களது கணினியில் சேகரித்து கொண்டனர்.

மேலும் இவர்கள் யாருடன் பேசினார்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்தும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு பேர் வீடுகளிலும் சுமார் 4 மணிநேரம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் காரணமாக மேலப்பாளையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க: கரூரில் வேகத்தடையை அகற்றக்கோரிய வழக்கு: அதனை நீக்க மக்கள் எதிர்ப்பதாக அரசு பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.