ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ - அரியவகை மரங்கள் நாசம்

author img

By

Published : Jun 14, 2019, 10:28 AM IST

தேனி: மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால் அரியவகை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

File pic

தேனி மாவட்டத்தில் கோடை தொடங்குவதற்கு முன்னரே வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி எரிந்து வருகின்றது. இதனால் வனங்களின் வளம் அழிவதோடு, அங்கு வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்விடமும் பாதிக்கப்பட்டு அவைகள் வேறு இடத்திற்கு இடம் பெயரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத் துறையினர் முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டுத் தீ


இந்நிலையில் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள அகமலை வனப்பகுதியில் இன்று காட்டுத் தீ பற்றி எரிந்து வருகின்றது. இதனால் பல ஏக்கர் பரப்பளவு வனத்தில் உள்ள பல அரியவகை மரங்கள், மூலிகைச்செடிகள் எரிந்து நாசமாகி வருகின்றன.


தீயை அணைக்க நீன்ட நேரமாக வனத் துறையினர் தீவிரமாக போராடிவருகின்றனர். மாவட்ட நிர்வாகம், வனத் துறையினர் காட்டுத் தீ விஷயத்தில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Intro: பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில்; பற்றி எரியும் காட்டுத்தீ – அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்.
Body: தேனி மாவட்டத்தில் கோடை துவங்குவதற்கு முன்னரே வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி எரிந்து வருகின்றது. இதனால் வனங்களின் வளம் அழிவதோடு, அங்கு வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்விடமும் பாதிக்கப்பட்டு அவைகள் வேறு இடத்திற்கு இடம் பெயரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டும் அவை தோல்வியிலே முடிகின்றன.
இந்நிலையில் பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள அகமலை வனப்பகுதியில் இன்று காட்டுத்தீ பற்றி எரிந்து வருகின்றது. இதனால் பல ஏக்கர் பரப்பளவு வனத்தில்; உள்ள பல அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச்செடிகள் எரிந்து நாசமாகி வருகின்றன.
மேலும் வன விலங்குகளும் தங்களின் வாழ்விடத்தை மாற்றி வேறு இடத்திற்கு இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நீன்ட நேரமாக வனத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.
Conclusion: மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் காட்டுத்தீ விசயத்தில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.