ETV Bharat / state

தீக்குளிக்க முயன்ற மூதாட்டிகள்... தேனி வீரபாண்டி எஸ்ஐ மீது கண்ணீர் மல்க குற்றச்சாட்டு...

author img

By

Published : Oct 4, 2022, 9:37 AM IST

சொத்து பிரச்சனையில் ஒருதலை பட்சமாக செயல்படும் வீரபாண்டி எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க கோரி 2 மூதாட்டிகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

தேனி மாவட்டம் பாலார்பட்டியைச் சேர்ந்தவர் சரோஜா(67). இவரது மகன் கோபி அவரது மனைவி சிவரஞ்சனி உடன் சேர்ந்து சரோஜாவிடம் சொத்து தகராறு காரணமாக கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். அதனால் சரோஜா, வீரபாண்டி காவல் நிலையத்தில் கோபி மீது புகார் அளித்தார்.

தீக்குளிக்க முயன்ற மூதாட்டிகள்... தேனி வீரபாண்டி எஸ்ஐ மீது கண்ணீர் மல்க குற்றச்சாட்டு...

அந்த புகாரின் அடிப்படையில் வீரபாண்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் வரதராஜ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருதலை பட்சமாக செயல்பட்டு தன்னை மிரட்டியதாக சரோஜா குற்றம்சாட்டியுள்ளார். அதோடு தனது சொத்தை பெறுவதற்கு வெளிநாட்டில் இருக்கும் லோகநாதனிடம் என்பவரிடம் பணம் பெற்றுக்கொண்டு இப்படி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று (அக்.3) சரோஜாவும் மற்றும் அவருடன் வந்த மூதாட்டியும் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனைக் கண்ட அங்கிருந்த காவலர்கள் இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

இதையும் படிங்க: மருத்துவமனையில் நர்ஸுக்கு கத்திக்குத்து; கணவர் வெறிச்செயல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.