ETV Bharat / state

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: கணவனுக்கு ஆயுள் தண்டனை

author img

By

Published : Sep 6, 2019, 8:29 AM IST

தேனி: சின்னமனூரில் வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/05-September-2019/4351254_makila.mp4

தேனி மாவட்டம் சின்னமனூர் ஆர்.சி.பள்ளித்தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி பாண்டியன். இவர் 2010ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமுத்து என்பவரது மகள் சௌந்திராவை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் திருமணமான நாளிலிருந்தே கருப்பசாமி பாண்டியன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு வற்புறுத்திவந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பொறுமையிழந்த சௌந்திரா தனது தந்தையின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதையடுத்து, கருப்பசாமி பாண்டியன் தனது மாமனார் வீட்டுக்கு வந்து இனிமேல் வரதட்சணை கேட்டு தகராறு செய்யமாட்டேன் என உறுதியளித்து சௌந்திராவை சமாதானம் செய்து மீண்டும் சின்னமனூருக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டிற்கு வந்த பத்தாவது நாளில் (2011 மார்ச் 2) சௌந்திரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரின் தந்தைக்கு கருப்பசாமி பாண்டியன் தகவல் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தங்கமுத்து அங்குசென்று தனது மகளின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதுள்ளார்.

ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

இதையடுத்து, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி சின்னமனூர் காவல் நிலையத்தில் தங்கமுத்து புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கருப்பசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் நேற்று விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், குற்றம்சாட்டப்பட்ட கருப்பசாமி பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி கீதா தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து குற்றவாளி கருப்பசாமி பாண்டியனை தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச்சென்றனர்.

Intro: வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
Body: தேனி மாவட்டம் சின்னமனூர் ஆர்.சி.பள்ளித்தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி பாண்டியன். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தை சேர்ந்த தங்கமுத்து என்பவரது மகள் சௌந்திராவை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் திருமணமான நாள் முதல் இருந்தே இருவருக்குமிடையே வரதட்சணை சம்பந்தமாக
சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அதன் பின்னர் கரூரில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு சென்ற சௌந்திராவை சமாதானம் செய்து மீண்டும் சின்னமனூருக்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த 10வது நாளில் 02.03.2011 அன்று சௌந்திரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் தந்தைக்கு கருப்பசாமி பாண்டியன் தகவல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சின்னமனூர் காவல் நிலையத்தில் அவரின் தந்தை தங்கமுத்து கொடுத்த புகாரில், சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கருப்பசாமி பாண்டியனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
வழக்கு வசாரணை தேனி மாவட்ட மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்றறு வந்த நிலையில் இன்று விசாரனை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கருப்பசாமி பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தேனி மாவட்ட மகிளா நீதி மன்றநீதிபதி கீதா தீர்ப்பு வழங்கினார். Conclusion:இதனையடுத்து குற்றவாளி கருப்பசாமி பாண்டியனை தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்தியசிறைக்கு காவல்துறையிணர் அழைத்துச்சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.