ETV Bharat / state

'அரசுப்பேருந்து கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி' - 5 ஆண்டுகள் கழித்து 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்த நீதிமன்றம்!

author img

By

Published : Dec 13, 2019, 8:40 PM IST

தேனி: அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த மது போதை ஆசாமிக்கு 4ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

damaged govt bus glass
சிறை தண்டனை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்னஓவலாபுரத்தைச் சேர்ந்த சின்னவர் என்பவரின் மகன் நிஷாந்த்(29). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு கம்பம் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்திற்கு வந்த அரசுப்பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்டு, பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி, ஓட்டுநரைத் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அரசுப்பேருந்து ஓட்டுநர் பகவத்சிங் அளித்த புகாரில் பேரில், கம்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நிஷாந்தை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இவ்வழக்கின் விசாரணை 5 ஆண்டுகளாக தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.

4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்த நீதிமன்றம்

அதில், அரசுப் பேருந்தை சேதப்படுத்துதல், அரசுப் பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியது உள்ளிட்ட குற்றத்திற்காக நிஷாந்திற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி ஜி. விஜயா தீர்ப்பளித்தார். இந்த அபராதத் தொகையை தமிழ்நாடு அரசுப்பேருந்துக் கழகம் கம்பம் பணிமனைக்குச் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு, தொடர்ந்து குற்றவாளியை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: காப்பீடு இல்லாத வாகனத்தை விற்க சட்டத்தில் திருத்தம் - அரசிதழில் வெளியீடு

Intro: அரசுப்பேருந்து கண்ணாடியை உடைத்த மது போதை ஆசாமிக்கு 4ஆண்டு சிறை தண்டனை. தேனி நீதிமன்றம் உத்தரவு.
Body: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்னஓவலாபுரத்தை சேர்ந்த சின்னவர் என்பவரது மகன் நிஷாந்த்(29). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு கம்பம் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்திற்கு வந்த அரசுப்பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்டு பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி, ஓட்டுநரை தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக இராயப்பன்பட்டியை சேர்ந்த அரசுப்பேருந்து ஓட்டுநர் பகவத்சிங் அளித்த புகாரில் கம்பம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிஷாந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணை தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் அரசுப் பேருந்தை சேதப்படுத்துதல், அரசுப்பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியது உள்ளிட்ட குற்றத்திற்காக நிஷாந்திற்கு 4ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நீதிபதி ஜி.விஜயா தீர்ப்பளித்தார். இந்த அபராதத் தொகையை தமிழ்நாடு அரசுப்பேருந்து கழகம் கம்பம் பணிமணைக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


Conclusion: இதனையடுத்து குற்றவாளியை மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக தகுந்த பாதுகாப்புடன் காவல்துறையினர் கொண்டு சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.