ETV Bharat / state

ஜெயலலிதா வாகனம் தாக்கப்பட்ட வழக்கு; ஓபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 7:46 AM IST

Ex cm jayalalitha car attack issue: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாகனம் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, தேனி நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி வீடியோ கான்பரன்ஸ் மூலம் சாட்சியம் அளித்தார்.

Ex cm jayalalitha attack issue
ஜெயலலிதா தாக்கப்பட்ட வழக்கு: ஓபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி வீடியோ கான்பரன்ஸ் மூலம் சாட்சி!

ஜெயலலிதா தாக்கப்பட்ட வழக்கு: ஓபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி வீடியோ கான்பரன்ஸ் மூலம் சாட்சி!

தேனி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2008ஆம் ஆண்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு சென்றபோது, அவருடைய வாகனம் சில மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அது தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

பின்னர் இச்சம்பவம் குறித்து கமுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடந்த 15 ஆண்டுகளாக வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாகனம் தாக்கப்பட்டபோது நேரில் பார்த்த சாட்சிகளாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு முன்பு விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில். முக்கிய சாட்சியான முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணை குறித்து சாட்சியம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஓபிஎஸ் கூறியதாவது, "2008ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தேவர் குருபூஜைக்கு சென்றபோது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியம் என்றதால், தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வீடியோ மூலம் சாட்சியம் அளித்துள்ளேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2 மாதங்களாக வயிற்றில் இருந்த 8 கி கட்டி!.. வெற்றிகரமாக நீக்கிய ராயப்பேட்டை அரசு மருத்துவர்கள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.