ETV Bharat / state

குடிநீர் வழங்கக்கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை!

author img

By

Published : Dec 24, 2020, 9:51 PM IST

தேனி: சோத்துப்பாறை அணையின் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் வடுகபட்டி பகுதிக்கும் குடிநீர் வழங்க கோரி பேரூராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Municipal office besieged for drinking water
Municipal office besieged for drinking water

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது வடுகபட்டி பேரூராட்சி. இதில் சேடபட்டி, வள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு முறையான குடிநீர் விநியேகம் செய்யவில்லை எனக் கூறி அப்பகுதியினர் இன்று வடுகபட்டி பேரூராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், எங்கள் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் இல்லை. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு புதிதாக செயல்படுத்தப்படவுள்ள சோத்துப்பாறை அணை கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தங்கள் பகுதியையும் இணைத்து குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும் என்றனர்.இது தொடர்பான புகார் மனுவை பேரூராட்சி அலுவலகத்தில் வழங்கி விட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:ஓட்டைப் பிரித்து கொள்ளையடித்த திருடன் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.