ETV Bharat / state

ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம்

author img

By

Published : Jul 9, 2022, 4:26 PM IST

ஆண்டிபட்டியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம்
ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம்

தேனி: ஆண்டிபட்டியில் தெப்பம்பட்டி சாலையில் உள்ள ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் அதிமுக மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்களில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் , கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் , உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

வரும் 11ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுகுழுவில் பங்கேற்பது குறித்தும் அதில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது . கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஒருமித்த கருத்து முடிவு எடுக்கப்படாத நிலையில் கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம்

இதையடுத்து ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜன் அனைவரும் பொதுக்குழுவிற்கு சென்னை செல்வோம் யாரிடம் இரட்டை இலை இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவளிப்போம் என்று கூறினார். அதைக் கேட்ட அனைவரும் கைகட்டி ஒரு மனதாக ஆதரவு தெரிவித்தனர் இரட்டைஇலை சின்னம் எங்கே இருக்கிறதோ அங்கு அனைவரும் ஆதரவு அளிப்பது என்றும் , தற்போது எடப்பாடிக்கு அதிக ஆதரவு இருப்பதால் அவருக்கு ஆதரவு அளிக்கலாம் என்றும் ஒன்றிய செயலாளர் லோகிராஜன் பேசினார்.

அப்போது உற்சாகமான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் , எடப்பாடி பழனிசாமி வாழ்க ஒற்றை தலைமை வேண்டும் என சொல்லி வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அங்கு ஆதரவு என கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்ட நிலையில் ஒருதரப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள் என கோஷங்கள் எழுப்பக்கூடாது என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதைடுத்து இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவு என்று கூறி கூட்டத்தை முடித்து வைத்தார் ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன்.

இதையும் படிங்க: ’கலைஞரை கவர்ந்த பனகல் அரசர்’ ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.