ETV Bharat / state

10 மணி நேரத்தில் முழு குர்ஆனையும் ஒப்பித்து கல்லூரி மாணவன் சாதனை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 3:36 PM IST

Quran Telling Record: தேனியில் முழு குர்ஆனையும் மனப்பாடமாக பத்து மணி நேரத்தில் ஒப்பித்து இஸ்லாமிய இறையியல் கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

Student Quran Telling Record
முழு குர்ஆனையும் ஒப்பித்து கல்லூரி மாணவன் சாதனை

முழு குர்ஆனையும் ஒப்பித்து கல்லூரி மாணவன் சாதனை

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜாமிஆ அல்-அஷரத்துல் முபஷ்ஷரா என்ற பெயரில் இறையியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த இறையியல் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் இஸ்லாமிய இறையியல் குறித்து பாடம் பயின்று வருகின்றனர். இந்த இறையியல் கல்லூரியில் மாணவர்களுக்கு திருக்குரான் கூறும் அனைத்து விஷயங்களையும் கற்றுத் தருவதாகக் கூறப்படுகிறது.

இதில், திருக்குரான் என்பது 30 பாகங்களின் 114 அத்தியாயங்களில் 6 ஆயிரத்து 666 வசனங்கள் கொண்டதாகும். மனித குலத்திற்கு தேவையான அனைத்து நல்ல விஷயங்களையும் இந்த திருக்குர்ஆன் கூறுகின்றது. இந்த இறையியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்த திருக்குர்ஆனின் அனைத்து பாகங்களிலும் உள்ள அனைத்து வசனங்களையும் கற்றுத் தேர்ந்து பட்டம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கல்லூரியில் பயின்று வரும் மதுரையைச் சேர்ந்த சையது சுல்தான் என்பவருடைய மகன் முஹம்மதுஉவைஸ் என்ற மாணவர் திருக்குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்து தொடர்ந்து 10 மணி நேரத்தில் திருக்குர்ஆன் புத்தகத்தை பார்க்காமல், மனப்பாடமாக 6,666 வசனங்களையும் ஒப்பித்து சாதனை படைத்துள்ளார்.

மேலும், இந்நிகழ்வில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் மாணவர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு திருக்குர்ஆன் ஒப்புவித்தலை கண்காணித்தனர்.

இதையும் படிங்க: கவிதை பேசும் ஓவியம் நீ.. நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.