ETV Bharat / state

சமூகத்தின் அழுத்தத்திற்கு ஒருபோதும் இடம் அளிக்காதீர்கள் - துணை குடியரசுத்தலைவர் நம்பிக்கை உரை!

author img

By

Published : May 18, 2022, 10:54 PM IST

உதகைக்கு சென்ற துணை குடியரசுத்தலைவர் வெங்கைய நாயுடு லாரன்ஸ் பள்ளி மாணவர்களிடம் உரையாற்றினார்.

துணை ஜனாதிபதி  வெங்கைய நாயுடு பள்ளி மாணவர்களிடம் உரையாடல்
துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பள்ளி மாணவர்களிடம் உரையாடல்

நீலகிரி : உதகைக்கு நேற்று வந்திருந்த துணை குடியரசுத்தலைவர் இன்று பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் லாரன்ஸ் பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவின் எதிர்காலத்திற்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் வாசலில் இருக்கும் இளம் மாணவர்களுடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம்.

ஒரு நாட்டிலுள்ள இளைஞர்களால் தான் அதன் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுக்கும் வாசலில் நிற்கிறது. உங்களுடைய எதிர்காலமும் நமது தேசத்தின் எதிர்காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது என்பதை சொல்ல வேண்டியதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியுடன் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அடுத்த தலைமுறையாக நாம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தால் இந்தியாவை பற்றி உலகமே பேசும் அளவிற்கு ஒரு புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பாகும்.

துணை ஜனாதிபதி  வெங்கைய நாயுடு பள்ளி மாணவர்களிடம் உரையாடல்
துணை குடியரசுத்தலைவர் வெங்கைய நாயுடு பள்ளி மாணவர்களிடம் உரையாடல்

லாரன்ஸ் பள்ளி லவ்டேலில் 164 ஆண்டுகால செழுமையான ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. பண்பாடு, பாரம்பரியங்கள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மிக நீண்ட வரலாறு இந்த பள்ளிக்கு உள்ளது. அவையே உங்களுடைய வேர்களாக செயல்படுகின்றன. அந்த வலுவான அடித்தளத்தை உருவாக்கி சிறு குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய பள்ளியும் அதனுடன் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் பாதையில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

கல்வி மற்றும் இணைப்பாடத்திட்ட கற்றலின் கலவையான ஒரு முழு அளவிலான கல்வியைப் பெறுவதற்கு நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். உங்களைப் போன்ற அதிர்ஷ்டமும் சலுகையும் இல்லாத பல குழந்தைகள் நம் நாட்டில் உள்ளனர் என்பதையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அங்குள்ள மக்களுக்கு வீடுகளையும் பள்ளிகளையும் மீண்டும் கட்டுவதற்கு நீங்கள் செய்த உதவியை தலைமை ஆசிரியர் மூலம் அறிந்து நான் பெருமைப்படுகிறேன்.

தயவு செய்து உங்கள் உன்னதப் பணியைத் தொடருங்கள். உங்கள் பள்ளியின் பொன்மொழிகள் எனது கவனத்தை ஈர்த்தது. உங்கள் பள்ளியை பற்றி நான் சிந்திக்கும்போது, என் மனதில் தோன்றிய சில எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

உங்கள் பள்ளியானது, ஒருபோதும் விட்டுக் கொடுக்காதே என்று கூறும் வேளையில் ஒருபோதும் அடிபணிய வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறது. ஆணவத்திற்கு ஒருபோதும் இடம் அளிக்காதீர்கள். சத்தியத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்.

சமூகத்தின் அழுத்தத்திற்கு ஒருபோதும் இடம் அளிக்காதீர்கள். ஊழலுக்கு ஒருபோதும் இடம் அளிக்காதீர்கள். சோதனைகளுக்கு ஒருபோதும் இடம் அளிக்காதீர்கள். வாழ்க்கையில் சோதனைகள் மற்றும் இன்னல்களுக்கு ஒருபோதும் அடிபணியாதீர்கள்.

துணை குடியரசுத்தலைவர் வெங்கைய நாயுடு பள்ளி மாணவர்களிடம் உரையாடல்

நான் சொன்ன எல்லா விஷயங்களுக்கும் நீங்கள் அடிபணியாவிட்டால் நீங்கள் ஒரு சிறந்த மனிதராக மட்டுமல்ல உண்மையான தலைவராகவும் உண்மையான மகனாகவும் உண்மையான இந்தியாவின் மகளாகவும் மாறி நம் தாய்நாட்டை உச்சத்திற்கு கொண்டு செல்வீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ என உரையாற்றினர்.

இதையும் படிங்க : 5 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த துணை குடியரசுத்தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.