ETV Bharat / state

7.5% இட ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணாக்கருக்கு மட்டுமே - முதலமைச்சர் திட்டவட்டம்

author img

By

Published : Nov 6, 2020, 4:41 PM IST

நீலகிரி: மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணாக்கருக்கு மட்டுமே பொருந்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு மட்டுமே -முதலமைச்சர் திட்டவட்டம்!
7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு மட்டுமே -முதலமைச்சர் திட்டவட்டம்!

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 520 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து தேயிலை தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் அவர்களது கோரிக்கை, குறைகளை கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், “நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது.

உதகை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் மையம் 6 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 800 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை மூலம் 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுவருகிறது. ஆயிரத்து 510 பழங்குடியின மக்களுக்கு தனிநபர் அங்கீகார உரிமை வழங்கப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய் மதிப்பில் பழங்குடியினர் மக்களின் வீடுகள் புனரமைத்து தரப்பட்டுள்ளது. சிறு குறு விவசாயிகளின் 152 கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு!

மேலும், மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு முழுக்க அரசுப் பள்ளியில் பயிலும் மாணாக்கருக்கு மட்டுமே பொருந்தும் என்ற அவர், அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணாக்கருக்குப் பொருந்தாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பாஜகவின் வேல் யாத்திரை விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதையும் படிங்க...கணிணி ஆசிரியர்கள் 800 பேருக்கு பதவி உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.