ETV Bharat / state

அதிநவீன வசதியுடன் கூடிய உதகை அரசு மருத்துவமனை திறப்பு எப்போது? - அமைச்சர் மா.சு. கூறிய தகவல்!

author img

By

Published : Apr 4, 2023, 11:12 AM IST

உதகையில் 600 படுகை வசதியுடன் கூடிய அதிநவீன அரசு மருத்துவமனை வரும் ஜூலை மாதம் திறக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Government Medical College at Utagai
உதகை அரசு மருத்துவக்கல்லூரி

அதிநவீன வசதியுடன் உதகை அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு; அமைச்சர் கொடுத்த அப்டேட்...

நீலகிரி: உதகையை அடுத்த இத்தலார் கிராமத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் குடியிருப்பு 65 லட்சம் மதிப்பீட்டிலும், ஹேப்பி வேலி புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் 60 லட்சம் மதிப்பீட்டிலும் மொத்தம் 1.25 கோடி செலவில் புதிய மருத்துவ கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டினார்கள். இதனைத் தொடர்ந்து புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளையங்கி அணிவிப்பு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "கூடலூர் பகுதியில் ரூ.31 கோடி மதிப்பில் அரசு தலைமை மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. உதகை மருத்துவக் கல்லூரியில் 600 படுக்கை வசதியுடன் 15க்கும் மேற்பட்ட அதி நவீன சிகிச்சையுடன் எதிர் வரும் ஜூலை மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அல்லது விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் திறக்கப்படும். நீலகிரியின் மண்ணின் மைந்தர்கள் எனப் போற்றப்படும் தோடர் இன மக்களுக்கென வசதி கொண்ட தனி அறைகள் அவர்களுக்குத் தனியாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் நீலகிரி உட்பட 13 மாவட்டங்களில் மலை வாழ் மக்களிடையே பொதுவாக உள்ள சிக்கன் செல் அனிமீயா நோய்களைக் கண்டறியும் சோதனை கோவை மாவட்டத்திற்குச் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தற்போது உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே ரூ.20 லட்சம் மதிப்பில் சிக்கன் செல் அனிமீயா நோயை கண்டறிய உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் தனி ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், மருத்துவ கல்லூரி துணை இயக்குநர் மனோகரி, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பாலுசாமி உட்பட பல அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் மோதல்; நாகர்கோவிலில் பதற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.