ETV Bharat / state

மலைப்பாதையில் யானைகள் கூட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

author img

By

Published : Mar 23, 2020, 11:57 PM IST

குன்னூர்‌: மலைப்பாதையில் யானைகள் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

மலைப்பாதையில் காணப்படும் யானைகள் கூட்டம்
மலைப்பாதையில் காணப்படும் யானைகள் கூட்டம்

நீலகிரி மாவட்டம், 65 விழுக்காடு வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். மேலும், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால் பசுமையாகக் காணப்படுகிறது. இதனால் யானைகளுக்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் எளிதில் கிடைப்பதால், சமவெளி பகுதியில் இருந்து குன்னூர் கேஎன்ஆர் பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. இவ்வாறு வரக்கூடிய யானைகள் சாலையில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.

இந்நிலையில், இரண்டு சக்கர வாகனங்களில் வருவோரையும் அது விரட்டி வருகிறது. இதனால், அப்பகுதியில் அரசு மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், யானை கூட்டத்தைக் கண்டதும், புகைப்படங்கள் மற்றும்‌ செல்ஃபி போன்ற‌ செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றால் யானை தாக்கி உயிரிழக்கும் சூழல் நிலவி வருகிறது.

குன்னூர்‌ மலைப்பாதையில் யானைகள் கூட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

மேலும், சாலையில் வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும், யானைகள் தண்ணீர் தேடி அலைந்து திரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் ‌நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: '24 மணி நேரத்தில் 462 உயிர்கள்'- நிலை குலைந்த ஸ்பெயின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.