ETV Bharat / state

நிலச்சரிவைத் தடுக்க காட்டு சூரிய காந்தி விதைகள்!

author img

By

Published : Oct 29, 2019, 4:30 PM IST

நீலகிரி : நிலச்சரிவைத் தடுப்பதற்காக காட்டு சூரியகாந்தி விதைகள் குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டுள்ளது.

coonoor forest sunflower

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவைத் தடுக்கும் வகையில், ஆங்கிலேயர் காலத்தில், காட்டு சூரியகாந்தி விதைகள் குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன. வறட்சி காலங்களில் பூத்துக் குலுங்கும் இந்தப் பூக்களால், மண்ணின் உறுதித்தன்மை அதிகரிப்பதுடன், நிலச்சரிவையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

வழக்கமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி, தற்போது, மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் பரவலாகப் பூத்துக் குலுங்குகின்றன.

சாலையோரம் பூத்துக் குலுங்கும் காட்டு சூரிய காந்தி

வாசமில்லாத மலராக இவை இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சிதரும் வண்ணம் கொண்டிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இந்தப் பூக்களை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். அண்மையில் பெய்த மழையின் காரணமாக, சூரிய காந்தி செடிகளும் செழுமையாக வளர்ந்திருப்பதால், நிலச்சரிவு ஆபத்து நீங்கியிருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

18ஆவது முறையாக பவானிசாகர் அணை நிரம்பியது

Intro:நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவைத் தடுக்கும் வகையில், ஆங்கிலேயர் காலத்தில், காட்டு சூரியகாந்தி விதைகள் குன்னூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன. வறட்சி காலங்களில் பூத்துக் குலுங்கும் இந்தப் பூக்களால், மண்ணின் உறுதித் தன்மை அதிகரிப்பதுடன், நிலச்சரிவையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. வழக்கமாக அக்டோபர் நவம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி, தற்போது, மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் பரவலாக பூத்துக் குலுங்குகின்றன. வாசமில்லாத மலராக இவை இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சி தரும் வண்ணம் கொண்டிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இந்தப் பூக்களை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். அண்மையில் பெய்த மழையின் காரணமாக, சூரிய காந்தி செடிகளும் செழுமையாக வளர்ந்திருப்பதால், நிலச்சரிவு ஆபத்து நீங்கியிருப்பதாக இயற்கை ஆர்வலர்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்


Body:நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவைத் தடுக்கும் வகையில், ஆங்கிலேயர் காலத்தில், காட்டு சூரியகாந்தி விதைகள் குன்னூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன. வறட்சி காலங்களில் பூத்துக் குலுங்கும் இந்தப் பூக்களால், மண்ணின் உறுதித் தன்மை அதிகரிப்பதுடன், நிலச்சரிவையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. வழக்கமாக அக்டோபர் நவம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி, தற்போது, மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் பரவலாக பூத்துக் குலுங்குகின்றன. வாசமில்லாத மலராக இவை இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சி தரும் வண்ணம் கொண்டிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இந்தப் பூக்களை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். அண்மையில் பெய்த மழையின் காரணமாக, சூரிய காந்தி செடிகளும் செழுமையாக வளர்ந்திருப்பதால், நிலச்சரிவு ஆபத்து நீங்கியிருப்பதாக இயற்கை ஆர்வலர்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.