ETV Bharat / state

உதகையில் வழங்கப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள்

author img

By

Published : May 26, 2021, 10:07 PM IST

நீலகிரி : உதகையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிப்போருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா வழங்கினார்.

நிவாரண பொருட்கள் வழங்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேவா பரதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்.
நிவாரண பொருட்கள் வழங்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேவா பரதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 16 ஆயிரம் நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் 450க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக சுற்றுலாத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் பலர் ஆங்காங்கே நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட சேவாபாரத அமைப்பு சார்பாக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கும் பணி இன்று (மே.26) முதல் தொடங்கப்பட்டுள்ளது. உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா கலந்து கொண்டார்.

நிவாரண பொருள்கள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேவா பாரதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்.

பின்னர் மளிகை, காய்கறி, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் உள்பட தலா இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புகளை மக்களுக்கு அவர் வழங்கினார். சுமார் ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு அரசு அலுவலர்கள் மூலம் நிவாரணத் தொகுப்புகள் வழங்கபட்டு வருகின்றன.

அத்துடன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், தனிமைப்படுத்தப்பட்டோர், ஆதரவற்றோருக்கு பத்து நாள்களில் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கபடவிருக்கின்றன. மேலும் முன்களப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினிகள் போன்றவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : 'தாயாரின் உடல்நிலை' - 30 நாள்கள் பரோல் கேட்டு நளினி கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.