ETV Bharat / state

புற்றுநோயாளிகளுக்கு தலைமுடி கொடுத்து தன்னம்பிக்கையூட்டும் புகைப்பட கலைஞர் - பொதுமக்கள் பாராட்டு

author img

By

Published : Aug 12, 2023, 2:26 PM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கேன்சர் நோயாளிகள் சிகிச்சைக்கு பிறகு விக்கு வைத்து கொள்பவர்களுக்கு உதவ முடி வளர்க்கும் இளைஞரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்

புற்றுநோயாளிகளுக்கு தலைமுடி கொடுத்து தன்னம்பிக்கையூட்டும் புகைப்பட கலைஞர்
புற்றுநோயாளிகளுக்கு தலைமுடி கொடுத்து தன்னம்பிக்கையூட்டும் புகைப்பட கலைஞர்

புற்றுநோயாளிகளுக்கு தலைமுடி கொடுத்து தன்னம்பிக்கையூட்டும் புகைப்பட கலைஞர்

தஞ்சை: பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் கோட்டை தயா என்று அழைக்கப்படும் தயாநிதி(35). திருமணமான இவர் புகைப்படக் கலைஞராக அப்பகுதியில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த இரண்டு வருடங்களாக தனது தலைமுடியினை வெட்டாமல் சடை போல் நீளமாக வளர்த்து வருகிறார். இவர் எப்போதுமே நீண்ட சடை முடியுடன் தான் காணப்படுவார்.

இதனால் நீண்ட முடியுடன் அவரைப் பார்ப்பவர்கள் கோயிலுக்கு காணிக்கை செலுத்துவதற்காக வளர்க்கிறீர்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என கேட்பார்கள். இந்த நிலையில் கொடிய நோயான புற்றுநோயால் (கேன்சர்) பாதிக்கப்பட்டு சிகிச்சையின் போது தலைமுடி இழந்தவர்களுக்கு தன் முடியை கொடுத்து அவர்கள் விக் செய்து கொள்ள உதவ தயாராக உள்ளார்.

சுமார் 10 இஞ்ச் நீளம் அளவிற்கு இவரது தலை முடி வளர்ந்துள்ளது. இது குறித்து முடி வளர்க்கும் சமூக ஆர்வலர் தயாநிதி கூறும் போது, ”கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே போல் நீண்டதாக தலை முடி சுமார் 8 இஞ்ச்க்கு மேல் வளர்த்து கொடிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு வழங்கியுள்ளேன்.

தற்போது மீண்டும் இரண்டு வருடமாக தனது தலை முடியை 10 இன்ச் அளவுக்கு வளர்த்து புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக்கு வைத்துக் கொள்ள இலவசமாக தனது தலைமுடியை வழங்க உள்ளதாகவும், நோயாளிகளுக்கு பண உதவி வழங்க முடியாவிட்டாலும், தன்னால் இயன்ற தனது முடியை வளர்த்து விக்கு வைத்துக் கொள்ள தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் விக் வைக்க தேவைப்படுபவர்கள் அவரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். தொடர்புக்கு அவரது செல்போன் எண் 9245707143 தெரிவித்துள்ளார். இவரின் இந்த சமூக பணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (கேன்சர்) அறுவை சிகிச்சை முடிந்தவுடன் தலைமுடி தானாகவே உதிர ஆரம்பிக்கும். பாதிப்பு இருந்தாலும் தலை முடி கொட்ட தொடங்கி விடும்.

இதனால் நோயாளிகளின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர்கள் முகம் மாறி விடும், தோற்றம் பொலிவிழந்து காணப்படும். இதனால் அவர்களுக்குள் மனரீதியான பாதிப்பு உண்டாகும். மேலும் இதனால் சிலர் தங்களது தலையில் விக் வைத்துக் கொள்வார்கள். விக் வைத்தவுடன் நோயாளிகள் முகம் மற்றவர்கள் போல் காட்சியளிக்கும்.

பொதுவாகவே விக் வைத்துக் கொள்ளும் பழக்கம் பொதுமக்களிடையே இருந்து வருகிறது. தலைமுடி இல்லாமல் வழுக்கை தலையுடன் உள்ளவர்கள் விக் வாங்கி வைத்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் வழுக்கை தலை மறைக்கப்பட்டு அழகாக காட்சி அளிக்கின்றனர். மேலும் சினிமாவில் நடிக்கும் நடிகர்களும் விக் வைத்து தங்களது தோற்றத்தை மாற்றி கொள்கின்றனர்.

இதையும் படிங்க: தஞ்சையில் ஜெய் பீம் 2.0 நிகழ்ச்சியில் அண்ணாமலையை வெளுத்து வாங்கிய முத்தரசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.