ETV Bharat / state

ஒரு வாக்கு வித்தியாசத்தில் 'அதிமுக சசிகலா' வெற்றி!

author img

By

Published : Jan 30, 2020, 3:41 PM IST

தஞ்சாவூர்: ஒத்திவைக்கப்பட்ட பேராவூரணி ஒன்றியத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக உறுப்பினர் சசிகலா என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

Union election chairman
Union election chairman

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் கடந்த முறை நடைபெற்ற நிலையில், போதிய உறுப்பினர்கள் வராத காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவைச் சேர்ந்த ஆறாவது வார்டு உறுப்பினர் சசிகலா என்பவருக்கும், ஏழாவது வார்டு உறுப்பினர் மாலா ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தது.

பேராயூரணி ஒன்றிய தலைவருக்கான மறைமுகத் தேர்தல்

இந்நிலையில் சசிகலா எட்டு வாக்குகள் பெற்று பேராயூரணி ஒன்றியத் தலைவராக வெற்றிபெற்றார். மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த மறைமுகத் தேர்தல் எந்தவித பிரச்னையும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது.

இதையும் படிங்க:5 துறைகளின் புதிய கட்டடங்கள்: முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைப்பு!

Intro:ஒத்திவைக்கப்பட்ட பேராவூரணி ஒன்றிய தலைவர் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் அதிமுக உறுப்பினர் சசிகலா 8 வாக்குகள் பெற்று வெற்றி


Body:தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான தேர்தல் கடந்த முறை நடைபெற்ற நிலையில் போதிய உறுப்பினர் வராத நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இன்று ஆவணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நடைபெற்றது. இதில் அதிமுகவைச் சேர்ந்த ஆறாவது வார்டு உறுப்பினர் சசிகலா என்பவருக்கும் ஏழாவது வார்டு உறுப்பினர் மாலாஆகிய இருவருக்கும் இடையே போட்டி இருந்த நிலையில் சசிகலா 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மாலாவிற்கு 7 வாக்குகள் கிடைத்தது மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த மறைமுகத் தேர்தல் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.