ETV Bharat / state

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: 10 பேர் வீடுகளில் அதிரடி சோதனை!

author img

By

Published : May 2, 2019, 9:21 PM IST

தஞ்சாவூர்: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வுத் துறையினர், கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் 10க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் அதிரடியாக சோதனையில் ஈடுப்பட்டனர்.

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில்: என். ஐ. ஏ 10 பேர் வீடுகளில் அதிரடி சோதனை

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், பிப்ரவரி 5ஆம் தேதி மத பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், மேலும் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கருதும் இன்னும் 6 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தேசிய புலனாய்வுத் துறை தமிழக காவல்துறையினருடன் இணைந்து, இன்று அதிகாலை கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதியில் உள்ள அப்துல் மஜீத் என்பவர் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர், அவர் வீட்டில் கொலை சம்பந்தமான ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை. மேலும் தலைமறைவாகி உள்ள அப்துல் மஜீத்தை தேடும் பணிகள் தீவிரமாக முடிக்கிவிடப்பட்டுள்ளது. அதேபோல், கும்பகோணம் அடுத்த திருபுவனம் திருமங்கலக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில்: என். ஐ. ஏ 10 பேர் வீடுகளில் அதிரடி சோதனை
தஞ்சாவூர் மார்ச் 02


 திருபுவணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கும்பகோணம் திருபுவனம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொடர்புடைய நபர்கள் வீடுகளில் தற்போது அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.


பிப்ரவரி 5ஆம் தேதி திருபுவனம் ராமலிங்கம் என்பவர் மதப் பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதி 6 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் தமிழக போலீசாரின் துணையுடன்  அதிகாலை கும்பகோணம் அருகே மேலக்காவேரி அப்துல் மஜீத் என்பவர் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர் இந்த சோதனையில் ஆவணங்கள் சோதனை நடத்தி வருகின்றனர் தலைமறைவாகி உள்ள அப்துல் மஜீத் எங்கு இருக்கிறார் என்பது போன்ற விசாரணைகள் நடந்து வருகிறது
இதேபோல கும்பகோணம் அடுத்த திருபுவனம் திருமங்கலக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனைகள் நடைபெறுகிறது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.