ETV Bharat / state

'பிணவறையில் நான் வைத்த முதல் மாலை 8ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு'- அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் உருக்கம்!

author img

By

Published : Apr 28, 2022, 3:30 PM IST

11 மாதங்களாக பல பள்ளி நிகழ்வுகளில் பங்கு பெற்று, பல பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகளையும், மாலைகளையும், மெடல்களையும் கொடுத்துள்ளேன். ஆனால், அந்த Mortuary-ல் நான் வைத்த முதல் மாலை 8-ஆம் வகுப்பு படிக்கின்ற ஒரு பள்ளி மாணவனுக்கு என அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் உருக்கமாக பேசியுள்ளார்.

பிணவறையில் நான் வைத்த முதல் மாலை 8-ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு- அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டபேரவையில் உருக்கம்.
பிணவறையில் நான் வைத்த முதல் மாலை 8-ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு- அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டபேரவையில் உருக்கம்.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியபோது, ’கேள்விக்கான பதில் சொல்வதற்கு முன்பு நான் ஒன்றைப்பதிவு செய்ய விரும்புகிறேன். நேற்று நடக்க கூடாத காரியம் தஞ்சை களிமேடு என்ற கிராமத்தில் நடந்துள்ளது.

94 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வரும் தனி மடத்திற்கான தேர் விழாவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. அதிகாலை 3 மணி அளவில் இந்த நிகழ்வு நடந்தாலும், 5 மணிக்கு முதலமைச்சர் என்னைத்தொடர்பு கொண்டு உடனடியாக அங்கே செல்ல வேண்டும் என சொன்னார். முன் கூட்டியே செல், நான் இரங்கல் தீர்மானம் வாசித்துவிட்டு வருகிறேன் என சொன்னார்.

பிறகு, நேரடியாக சென்றோம். அங்குள்ள மார்ச்சுவரியில் 11 சடலங்கள் இருந்தன. 11 மாதங்களாக பல பள்ளி நிகழ்வுகளில் பங்கு பெற்று பல பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகளையும், மாலைகளையும், மெடல்களையும் கொடுத்துள்ளேன். ஆனால் அந்த Mortuary-ல் நான் வைத்த முதல் மாலை 8ஆம் வகுப்பு படிக்கின்ற ஒரு பள்ளி மாணவனுக்கு’ என உருக்கமாகப் பேசும் போது முதலமைச்சர் கூர்ந்து கவனித்தார்.

தொடர்ந்த பேசிய அவர், ‘முதலமைச்சர் நேரடியாக வந்து கிராமப்பகுதிகளில் இறந்த மக்களை நேரடியாக நடந்து சென்று மரியாதை செலுத்தினார். அரசு அறிவித்த 5 லட்சம் ரூபாயையும், திமுக சார்பாக அறிவித்த 2 லட்சம் ரூபாயையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்தார்.


எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பல காரணங்களுக்காக விவசாயப்பெருங்குடி மக்கள் பலர் தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொண்டனர். அப்போது எதிர்க்கட்சித்தலைவராக ஒவ்வொரு வீடாக, தெருத்தெருவாக சென்று ஆறுதல் தெரிவித்தார். இன்றும் முதலமைச்சராக அதே பணியைத்தான் செய்து வருகிறார். எந்நிலையிலும் தன்னிலை மறக்காத ஒரு நல்ல மனிதனை இந்த நாடு முதலமைச்சராக பெற்றுள்ளது என்று தான் சொல்ல முடியும்.

முதலமைச்சர் இந்த நிகழ்வில் அரசியல் பார்க்க வேண்டாம் எனக் கூறினார். அதே போல் அந்த ஊரில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், பாஜக ஒன்றியக் குழு கவுன்சிலர், திமுக மாவட்ட கவுன்சிலர் என மூன்று பேர் அங்கு சேர்ந்து பணியாற்றினார்கள். முதலமைச்சர் சட்டப்பேரவையில் சொல்வது, நமது ஆட்சி என்பது field-இல் பிரதிபலிப்பது அதே போல் இந்த பேரவையிலும் பிரதிபலிக்க வேண்டும் என்கின்ற வேண்டுகோளை வைக்க கடமைப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தஞ்சாவூர் தேர் விபத்து; பாதிக்கப்பட்ட மக்களுக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.