ETV Bharat / state

ஈராண்டு திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் - அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!

author img

By

Published : May 16, 2023, 12:44 PM IST

கும்பகோணம் அருகே பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், கபிஸ்தலம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடத்தை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.

ஈராண்டு திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள்-அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!..
ஈராண்டு திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள்-அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!..

ஈராண்டு திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள்-அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!..

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், கபிஸ்தலம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டடத்தை திறந்து வைத்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “மாவட்டக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மாநில அரசு வழங்கிய நிதியிலிருந்து இது போன்ற நிறைய அங்கன்வாடி மையங்கள் தஞ்சை மாவட்டத்தில் கட்டப்பட்டு இருக்கின்றன. அந்தப் பணிகள் எல்லாம் மிகச்சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு அங்கன்வாடி மையத்தை தற்போது கீழ கபிஸ்தலத்தில் திறந்து வைத்துள்ளோம். இது போக, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலமாக 2021-22 மற்றும் 23ஆம் ஆண்டிற்கான அனைத்து பணிகளையும் ஆய்வு செய்து, அதில் 2021-22-ல் முடிக்கப்பட்ட பணிகள் தவிர மீதமுள்ள பணிகள் அனைத்தும் வரும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும், 2022-23-ல் பணிகளையும் விரைந்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரும் நானும் உத்தரவிட்டுள்ளோம்.

இந்தத் திட்டத்தில் மிகச் சிறப்பாக இன்று காலை முதல் மருங்குளத்தில் குழந்தைகள் நேய பள்ளி(pre school) ஏறத்தாழ சென்ட்ரிங் போடும் பணியில் தயாராக உள்ளது. சக்கராப்பள்ளியிலும் ஒரு பள்ளி கட்டடம் கட்டப்பட்டு மேற்கூரை போடும் அளவில் பணிகள் நடைபெறுகிறது. பெரும்பாலும் நான் பார்வையிட்டபோது சில இடங்களில் மேற்கூரைகளும் போடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏறத்தாழ ஆரம்ப பள்ளி முதல் நடுநிலைப்பள்ளி வரை புதிய பள்ளி கட்டடங்களை கட்டுவதற்காக நம்முடைய முதலமைச்சர் ரூபாய் 823 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்து 5,600 பள்ளி வகுப்பறைகளை மிகவும் சிறப்பாக கட்டுவதற்கு அதிகப்படியான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

அந்தப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதுவரை பள்ளிக்கு என்று கட்டடங்கள் கட்டுவதில் ஒரு சிறந்த அணுகுமுறையை முதலமைச்சர் உருவாக்கி, அதனுடைய உயரத்தை இரண்டு அல்லது மூன்று அடி உயர்த்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் தளத்தையும் உயர்த்தி வராண்டாவே, ஏறத்தாழ 9 அடி உயரத்திற்கு பெரிய வராண்டாவாக குழந்தைகள் விளையாடும் அளவில் உருவாக்கி, கல்லூரி கட்டடங்களுக்கு இணையாக சுமார் 6 ஆயிரம் வகுப்பறைகள் உருவாக்குவதற்காக நிதி ஒதுக்கித் தந்து, அந்தப் பணிகள் அதிவேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் பணிகள் அனைத்தும் வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் முடிப்பதற்கு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இங்கு நகர்ப்புற பகுதியாக இருந்தாலும் சக்கராப்பள்ளி ஊராட்சியில் இருந்து வெளியே வரும் அந்த 800 மீட்டர் சாலை முதலமைச்சர் கிராமப்புற சாலை திட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, மக்கள் அதிகப்படியாக வசிக்கக்கூடிய பகுதி இருந்தாலும், முதலமைச்சர் கிராமப்புற சாலை திட்டத்தில் தேவைப்பட்டால் பெரிய ஊர்களை இணைக்கின்ற சாலைகளும், அதே சமயத்தில் அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற சாலைகள் எல்லாம், ஏறத்தாழ 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை போடுவதற்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அதை துவங்குவதற்கான ஆக்கப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இது இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து வரும் 31ஆம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா தொடங்கும் நேரத்தில், தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் கிராமப்புற சாலைத் திட்டத்தை, தமிழ்நாட்டில் இதுவரை கண்டிராத அளவிற்கு ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக 10 ஆயிரம் கிலோ மீட்டர் நீள சாலை, ஒரே ஆண்டில் போடுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அதுவும், ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தொடங்கப்படவுள்ளது.

இதுபோல், ஏராளமான பணிகள் இந்த துறையின் மூலமாக கடந்த இரண்டாண்டு காலத்தில், ஏறத்தாழ 2 இலட்சத்து 23 ஆயிரம் சாதாரண ஏழை எளிய மக்களுக்கான வீடு கட்டும் திட்டத்தை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலமாக மாநில அரசின் பங்காக ஒரு வீட்டிற்கு 1 இலட்சத்து 74 ஆயிரம், ஒன்றிய அரசின் பங்காக 1 இலட்சத்து 4 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 2 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டிலான வீடுகள் கட்டும் பணி தற்போது எல்லா இடங்களிலும் விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்து 23 ஆயிரம் வீடுகள் கட்டி இருப்பது என்பது உண்மையிலேயே சிறந்த நடவடிக்கை. ஏனென்றால், தஞ்சாவூரில் மொத்தம் 22 ஆயிரம் வீடுகள் இருந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் 2 ஆண்டுகளில், 12 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மிக அதிக சிரத்தை எடுத்து பட்டா இல்லை என்றாலும், அதையெல்லாம் சீர் செய்து மாவட்ட ஆட்சியரும், திட்ட அலுவலரும் அந்தப் பணிகளை முடிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் ஏனைய துறையை உடைய அதிகாரிகள் அனைவரும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தஞ்சையில் அதனை ஆய்வு செய்தேன்” என்றும் திரு ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக அமைச்சர் ஆடியோ விவகாரம் குறித்து கவர்னருக்கு மனு அளிப்பேன் - எடப்பாடி பழனிசாமி பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.