ETV Bharat / state

கழிவுநீர் கலப்பதால் இறந்து மிதக்கும் மீன்கள்!

author img

By

Published : Apr 3, 2022, 10:22 PM IST

மன்னார்குடி பாமணியாற்றில் கலந்துவரும் சாக்கடை கழிவுகளால் சுமார் ரூ.20,ஆயிரம் மதிப்பிலான வளர்ப்பு மீன்கள் இறந்து மிதப்பதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மிதக்கும் மீன்கள்
மிதக்கும் மீன்கள்

திருவாரூர்: மன்னார்குடி வழியாக பாயும் பாமணியாற்றின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகாலமாக பாமணியாற்றில் மன்னார்குடி நகரத்தில் இருந்து பெருமளவு கழிவு பொருள்கள் கலந்துவருகின்றன. மேலும், பல்வேறு மருத்துவமனைகளில் இருந்தும் பாமணியாற்றில் கழிவுகளை இரவோடு இரவாக கொட்டி வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் சென்னை கூவம் ஆற்றை மிஞ்சும் அளவிற்கு பாமணியாற்றின் தண்ணீர் கருமை நிறத்துடனும், ஒரு வித தூர்நாற்றத்துடன் இருந்து வருகிறது. இதனால், பாமணியாற்றில் இருந்து பாசனவசதி பெறும் கிராம மக்கள் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கழிவுநீரை அகற்றக் கோரிக்கை

இறந்து மிதக்கும் மீன்கள்: இதனால், மன்னார்குடியை அடுத்த மூனாம்சேத்தி கிராமத்தில் வசிக்கும் செல்லதுரை என்பவர் சொந்தமான குளத்தில் மீன் வளர்ப்பு தொழிலை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது அவரது குளத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்களை வளர்த்து வருகிறார். இவரது குளத்திற்க்கு பாமணியாற்றில் இருந்து பாய்ந்த கழிவுநீரால் குளத்தில் வளர்க்கப்பட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புடைய பல எண்ணற்ற மீன்கள் உயிரிழந்து மிதந்து வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு பாமணியாற்றில் கழிவுநீர் கலப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிவகங்கையில் உயிரை பணயம் வைத்து உலக சாதனை- தடுத்து நிறுத்திய காவல்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.